நமதூர் மாணவர்கள் ஒரு பார்வை! - A.பைசல் அஹமத்


சமீப காலமாக நமது ஊர் மாணவர்களிடம் புதிய புதிய செயல்பாடுகளும், பல மாற்றங்களும் தென்பட்டு வருகிறது. முன்பு பொருளாதார வசதியின்றி பள்ளியிடை நிறுத்தம் செய்தனர் பெற்றோர்கள். இன்று அந்த கஷ்டத்தை பெற்றோர்களுக்கு கொடுக்காமல் மாணவர்களே தங்களை 10, மற்றும் 12-ம் வகுப்போடு படிக்க பிடிக்காமல் அல்லது படிப்பில் ஆர்வம் இல்லாமல்.தங்களை இடை நிறுத்தம் செய்து கொள்கிறார்கள். 

கடந்த இரண்டு வருடங்களாக இது போன்று படிப்பில் ஆர்வம் இல்லாமல் பள்ளிக்கு போக விருப்பம் இல்லாமல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை நமதூரில் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

இதற்கு பெற்றோர்கள் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. சமூக சூழலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும், மாணவர்களின் நட்பு வட்டாரமும் காரணம் வகிக்கின்றன. ஆம் இன்று 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் Facebook page create செய்து Chat செய்வது, Whatshap group reed செய்வது,  2G, 3G என Monthly internet pack போட்டு தேவையற்ற விஷயங்களை பார்ப்பது போன்ற காரணங்களால் படிப்பில் ஆர்வமில்லாமல் போகிறது. 

சிகரெட், ஹான்ஸ், மதுவெல்லாம் இன்று நமதூர் மாணவர்களிடையே மிக சர்வ சாதாரண விஷயங்களாக மாறிவிட்டன. இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது தான் ஒரு பெரிய மனுசன் என்பது போன்று எண்ணுகிறார்கள். 6, 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட இன்று நமது தெருக்களில் கெட்ட வார்த்தைகளில் சத்தம் போட்டு சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள்.

இரவு நேரங்களில் TTPL, ஹோட்டல்களுக்கு கூட வண்டியை வாடகைக்கு எடுத்து கொண்டு சுற்றும் அளவிற்கு முன்னேறிவிட்டார்கள் பள்ளி மாணவர்கள். இதையெல்லாம் கேட்பதற்கு நம் தந்தை தான் ஊரில் இல்லையே அவர் வெளிநாட்டில் தானே இருக்கிறார், அவருக்கு என்ன தெரிந்து விடப்போகிறது. வீட்டில் இருக்கும் அம்மாவெல்லாம் ஒரு பொருட்டேயில்லையே எளிதாக அம்மாவை ஏமாற்றிவிடலாமே. 

பள்ளி மாணவர்கள் இப்படியென்றால் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒருபடி மேலே சென்று போதை பொருட்களை உட்கொள்கிறார்களாம் ஊரில் பேசிக்கொள்கிறார்.

இந்த 21 ம் நூற்றாண்டில் மாணவர்கள் கல்வியின் அவசியத்தையும், அரசியல், சமூகம் சார்ந்த அறிவும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கு காரணம் நமதூரின் சமூக கட்டமைப்பும்,  சீர் கெட்டிருப்பதும், விழிப்புணர்வு மற்றும் பொதுவுடைமை இல்லாமையும், பெற்றோரின் கண்டிப்பின்மையும் தான்.

நமதூர் மாணவர்களின் இந்நிலைக்கு ஊர் மக்களாகிய நாமும் பொறுப்பேற்று கவலை கொள்ள வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றுகூடி கவனம் கொடுத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவிபுரிவானாக ஆமீன்.....

குறிப்பு : நமது ஊரில் உள்ள  அனைத்து மாணவர்களும் இப்படித்தான் என்று குறிப்பிடவில்லை. சிலர் மட்டுமே இப்படி செய்கிறார்கள். அந்த சிலர் நாளை பலராக மாறிவிட கூடாது என்பதற்காகவே இந்த கட்டுரை.

- A.பைசல் அஹமத்
நமதூர் மாணவர்கள் ஒரு பார்வை! - A.பைசல் அஹமத் நமதூர் மாணவர்கள் ஒரு பார்வை!  - A.பைசல் அஹமத் Reviewed by நமதூர் செய்திகள் on 03:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.