குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கும்!

குழந்தைகள் குறைந்த நேரம் தூங்கினால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தற்போதைய குழந்தைகள் படிப்பு, மொபைல் கேம்ஸ் என இரவு நேரங்களில் தூங்காமல் விழித்திருக்கின்றனர்.
இந்நிலையில், போதிய நேரம் தூங்காத குழந்தைகளுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 6 மாதம் முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் போதிய நேரம் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் எல்சி தவேராஸ் என்பவர் இதுகுறித்து சுமார் 1046 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டார்.
அதில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் அயர்ந்து தூங்க வேண்டும். 3 முதல் 4 வயது குழந்தைகள் 11 மணி நேரமும், 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் தினமும் 10 மணி நேரமும் தூங்க வேண்டும் என கண்டறியப்பட்டது.
இதைத் தவிர்த்து, குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை ஆசிரியர்கள் மதிய வேளையில் சிறிதுநேரம் தூங்கவைக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள் என்பதைக் கவனித்து அவர்களை போதிய நேரம் தூங்கவைக்க வேண்டும்.
குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கும்! குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கும்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.