கோவாவில் குதிரை பேர ஆட்சி : திக்விஜய் சிங்

கோவாவில் குதிரை பேரம் நடத்தி பாஜக-வினர் ஆட்சியமைக்க உள்ளனர் என்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். கோவாவில் ஆட்சியமைக்க மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு ஆளுநர் அழைப்புவிடுள்ளார். இந்நிலையில், நாளை கோவாவில் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது.
40 தொகுதிகள் கொண்ட கோவாவில், ஆட்சியமைக்கத் தேவையான 21 தொகுதிகளை எந்தக் கட்சியும் பிடிக்கவில்லை. இதையடுத்து, அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டது. கோவாவில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 17 தொகுதிகளையும் பாஜக 13 தொகுதிகளையும் வென்றுள்ளன. பிற கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. கோவாவில் ஆட்சியமைக்கத் தேவையான 21 தொகுதிகளை எந்தக் கட்சியும் பிடிக்கவில்லை. கோவாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் மேலும் 8 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவானது.
பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் மனோகர் பாரிக்கர், மீண்டும் கோவா அரசியலுக்குத் திரும்பி முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என, அந்த மாநில பாஜக எம்.எல்.ஏ.,க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், மனோகர் பாரிக்கர் கோவா அரசியலுக்குத் திரும்பி முதல்வராகப் பதவியேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பாஜக-வுக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, பனாஜி நகரில் கோவா ஆளுநர் மிருதுளா சின்காவை சந்தித்து, தனக்கு 21 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, ஆட்சியமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். கோவா பார்வர்டு கட்சி, மராட்டியவாடி கோமந்த கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த தலா 3 எம்.எல்.ஏ.,க்கள், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் ஆகியோர் தன்னை ஆதரிப்பதாகக் கூறி அவர்களுடைய ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்தார். இதைத் தொடர்ந்து, கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா, மனோகர் பாரிக்கரை முதல்வராகப் பதவியேற்க அழைப்பு விடுத்தார். முதல்வர் பதவியேற்புக்குப் பின்னர் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங் கூறியதாவது: பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவைப் பெற்று கோவாவில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டுமென்று பாஜக முயற்சித்தது. இதற்காக அமைச்சர் பதவி, கோடிக்கணக்கில் பணம், கார் உள்ளிட்டவற்றைத் தருவதாக எம்.எல்.ஏ-க்களிடம் அவர்கள் பேரம் பேசியுள்ளனர்.
பாஜக சார்பில் முதல்வராக இருந்தவர் தோல்வியடைந்துவிட்டார். 6 அமைச்சர்களும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், பாஜக-வுக்கு ஆட்சியமைக்க என்ன உரிமை இருக்கிறது? கோவாவில் தோல்வியை பாஜக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் கோவாவில் குதிரை பேரத்தில் வெற்றியடைந்து பாஜக ஆட்சியமைக்க உள்ளது’ என்று குற்றம்சாட்டியுள்ளார் திக்விஜய் சிங்.
கோவாவில் குதிரை பேர ஆட்சி : திக்விஜய் சிங் கோவாவில் குதிரை பேர ஆட்சி : திக்விஜய் சிங் Reviewed by நமதூர் செய்திகள் on 00:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.