மோடியை கேள்வி கேட்கும் ராணுவ வீரர்!

கடந்த ஜனவரி மாதம், எல்லை பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றிவரும் தேஜ்பகதூர் யாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தினமும் குளிரில் 11 மணி நேரம் கால்கடுக்க நின்றுகொண்டே வேலை பார்க்கும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச் செல்கிறோம். எங்களுக்கு அரசு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பினாலும், உயர் அதிகாரிகள் அதை சட்ட விரோதமாக விற்பனை செய்து பணமாக்கிக் கொள்கிறார்கள் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், அவர் மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புப் படை கருத்து தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, மற்றொரு ராணுவ வீரரான, பிரதாப் சிங் தனது உயரதிகாரிகள் பூட்ஸை பாலீஷ் போடச் சொல்வதாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அடுக்கடுக்காக ராணுவ உயர் அதிகாரிகள் மீது குற்றாச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், தேஜ் பகதூர் மற்றோரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், அதிகாரிகள் செய்யும் ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காக நான் தண்டிக்கப்பட்டுள்ளேனா? என பிரதமர் மோடியுடம் கேள்வி எழுப்பியுள்ளார். எனது செல்பேசியை கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டேன். எனது செல்பேசி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது என்னை மனரீதியாக தொந்தரவு செய்கிறார்கள். வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவது உண்மை என்பதை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தேஜ் பகதூர், ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் அவர் நண்பர்களில் 17% பேர் பாகிஸ்தானியர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீண்டும் மீண்டும் பொய்யான குற்றச்சாட்டுகளை அளித்துள்ளார். தற்போது இரண்டாவது வீடியோ வெளியிட்டதன் மூலம் ராணுவ ஒழுங்குமுறைகளை மீறியுள்ளார் என மூத்த அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மோடியை கேள்வி கேட்கும் ராணுவ வீரர்! மோடியை கேள்வி கேட்கும் ராணுவ வீரர்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.