டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் தடை!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும், மக்களுக்கு 90 நாட்களுக்கு தடையும் விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும்விதமாக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் வலியுறுத்தியிருந்த வேளையில், இந்தச் செயலுக்கு அதிக விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தன.
டிரம்ப் விதித்த இந்த பயணத் தடை அமலுக்கு வருவதற்குமுன்னரே அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அதிரடியாக தடைவிதித்துள்ளது. இது, டிரம்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், இது எப்போதும் இல்லாதளவு ஒரு மிகுதியான நீதித்துறையின் தலையீடு. தேசிய நலனுக்காக குடியேற்றங்களுக்கு தற்காலிக தடை விதிக்க இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் அதிபருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது என அவர் தெரிவித்தார்.
டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் தடை! டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் தடை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.