சென்னையில் வேகமாகப் பரவும் பன்றிக்காய்ச்சல்!

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜி.ரமேஷ் என்பவர், மூச்சுத்திணறல் காரணமாக சில நாட்களாக வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
பின், உடல்நிலை மோசமாகவே நேற்று அவரை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தினர். சிகிச்சைக்கு உட்படுத்திய இரண்டு மணிநேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு முன்னர் எடுத்த உடற்பரிசோதனைகளை ஆய்வுசெய்த கல்லூரியின் டீன் கே.நாராயணசாமி கூறுகையில், ‘இவருக்கு கடந்த மார்ச் 18இல் பன்றிக்காய்ச்சலை உண்டாக்கும் ஹெச்1 என்1 கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சரியான நேரத்தில் கொண்டுவந்திருந்தால் அவரை உயிர் பிழைக்க வைத்திருக்க முடியும் என்றார்.
இந்நிலையில் ரமேஷ், ஆரம்ப நிலையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியின்படி, தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சலால் 1020 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதாரத் துறை கூறியிருந்தது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவிகிதத்தினர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திடீரென ஒருவர் பன்றிக்காய்ச்சலால் நேற்று இறந்துள்ளது, சென்னை மாநகர மக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.
சென்னையில் வேகமாகப் பரவும் பன்றிக்காய்ச்சல்! சென்னையில் வேகமாகப் பரவும் பன்றிக்காய்ச்சல்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.