தவறை தட்டிக் கேட்டவர் அடித்து கொலை!

தவறை தட்டிக் கேட்டவர் அடித்து கொலை!

பெண்களைச் செல்பேசியில் படம் பிடிப்பதை தடுத்த முதியவரை, மாநகராட்சி ஊழியர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப்கர் என்ற பகுதியில் பெண்கள் சிலரை நகராட்சி ஊழியர்கள் தங்களது செல்பேசியில் பெண்களை படம் எடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது, ஜாபர்கான் (55) என்பவர் அதைத் தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த முதியவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் அவர் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார். பிரேத பரிசோதனையில், மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பக்வாசா காஜி பஸ்தி பகுதியில் காலை 6.30 மணி அளவில் பெண்கள் சிலர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அந்த வழியாகச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் அவர்களைச் செல்பேசியில் படம் எடுத்துள்ளனர். அப்போது படம் எடுக்கக் கூடாது என ஜாபர்கான் தடுத்துள்ளார். அப்போது அவர்கள் ஜாபர்கானை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதனால், அவர் இறந்துவிட்டார் என அவருடைய சகோதரர் நூர் மொகமத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம், டெல்லியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களைத் தட்டி கேட்ட ரவீந்தர் என்ற ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் நினைவுகூரத்தக்கது.
தவறை தட்டிக் கேட்டவர் அடித்து கொலை! தவறை தட்டிக் கேட்டவர் அடித்து கொலை! Reviewed by நமதூர் செய்திகள் on 22:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.