கேரளாவுடன் இந்தோனேஷியா ஒப்பந்தம்!

கேரளாவுடன் இந்தோனேஷியா ஒப்பந்தம்!

வர்த்தகம், சுகாதாரம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் இணைந்து செயல்பட கேரள மாநிலத்துடன் இந்தோனேஷியா ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தோனேஷியா நாட்டின் தூதர் சவுட் சிரிங்கோரிங்கோ தலைமையிலான ஏழு பேர் அடங்கிய குழு கேரளா வருகை தந்துள்ளது. இக்குழுவானது கேரளாவின் தொழில் கூட்டமைப்பு மற்றும் திருவனந்தபுரம் வர்த்தகக் கூட்டமைப்புடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. வருகிற அக்டோபர் 11ஆம் தேதி இந்தோனேஷியாவில் 32ஆவது நான்கு நாள் வர்த்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. அதில் கேரள முதலீட்டாளர்கள் பங்கேற்கவும் இந்தோனேஷியா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டில் நடைபெற்றக் கண்காட்சியில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்றனர். அந்தக் கண்காட்சியில் அதிகமாகப் பொருள்களை வாங்கியவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. மேலும், அக்கண்காட்சியில் கிடைத்த 1.07 பில்லியன் டாலர் வருவாயில் இந்தியாவின் பங்கு மட்டும் 83 மில்லியன் டாலர்களாகும். இந்த ஆண்டிலும் வர்த்தகக் கண்காட்சியில் இந்தியாவிடமிருந்து கிடைக்கும் வருவாய் அதிகமாக இருக்கும் என்று சவுட் சிரிங்கோரிங்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டில், இந்தியாவிலிருந்து சுமார் 4.6 லட்சம் பயணிகள் இந்தோனேஷியாவுக்கு வருகை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 3.76 லட்சம் இந்தியர்கள் இந்தோனேஷியாவுக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவுடன் இந்தோனேஷியா ஒப்பந்தம்! கேரளாவுடன் இந்தோனேஷியா ஒப்பந்தம்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.