குறையும் பணவீக்கத்தால் பயனடையா விவசாயிகள்!

குறையும் பணவீக்கத்தால் பயனடையா விவசாயிகள்!

இந்தியாவின் பணவீக்க விகிதம் தொடர்ந்து சரிந்து வரும்போதிலும், விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்வதும், கொல்லப்படுவதும் நடந்தேறி வருகிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், விவசாயிகளுக்கு உறுதுறையாக இல்லாமல், தற்போது போராட்டத்தின்போது விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டது வேதனைக்குரிய ஒன்றாகும். விளைபொருளுக்கு நியாய விலை கேட்டுப் போராடிய விவசாயிகளில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம் பணவீக்க விகிதம் குறைந்து வருவதை அரசு மெச்சி வருகிறது. பணவீக்கம் குறைந்தால் விளைபொருட்களுக்கான விலை அதிகரிக்க வேண்டும். விலை அதிகரித்தால் விவசாயிகள் பயன்பெறுவர்; அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டின் ஜூலை மாதம் உணவுப் பணவீக்கம் 8.35 சதவிகிதமாக இருந்தது. அது, பின்னர் 2016 அக்டோபரில் 3.32 சதவிகிதமாகவும், 2017 ஜனவரியில் 0.53 சதவிகிதமாகவும், 2017 ஏப்ரலில் 0.31 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கம் குறையும்போது விவசாய விளைபொருட்களின் விலை அதிகரிக்க வேண்டும். ஆனால், அவற்றின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 2016 ஜூலை முதல் 2017 ஏப்ரல் வரையில் விளைபொருட்களின் விலை 60 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளது.
வெங்காயத்தின் சராசரி விலை 21 சதவிகிதமும், உருளைக் கிழங்கின் விலை 60 சதவிகிதமும், தக்காளியின் விலை 55 சதவிகிதமும், பூண்டின் விலை 50 சதவிகிதமும் குறைந்துள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு அவர்களுக்கான தீர்வை வழங்காமல் அடக்குமுறையில் ஈடுபடுவது நியாயமாகாது.
குறையும் பணவீக்கத்தால் பயனடையா விவசாயிகள்! குறையும் பணவீக்கத்தால் பயனடையா விவசாயிகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.