ஜெ. இறந்த பின்பே கைரேகை எடுக்கப்பட்டுள்ளது!

ஜெ. இறந்த பின்பே கைரேகை எடுக்கப்பட்டுள்ளது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி இன்று (நவ.22) தொடங்கினார்.
ஜெயலலிதா கைரேகை குறித்து சந்தேகம் எழுப்பிய திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணனுக்கு இன்று ஆஜராகி விளக்கமளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஆஜரான அவர் தனது புகார் குறித்து உரிய ஆதாரங்களுடன் ஆறுமுகசாமி முன்பு விளக்கமளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ அப்போலோ வெளியிட்ட பத்திரிகையாளர் குறிப்பில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகள் காரணமாகவே ஜெயலலிதா அட்மிட் ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அவர் சுயநினைவு இல்லாத நிலையில் அட்மிட் ஆகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உள்ள முரண்பாடுகள் குறித்துச் சுட்டிக்காட்டினோம். மேலும், கைரேகை தொடர்பான முக்கிய ஆவணங்களை நாளை சமர்ப்பிக்க உள்ளோம்.
உயிரோடு உள்ள ஒருவரின் கைரேகையில். வரிவரியாக இருக்கும். ஆனால் ஜெயலலிதாவின் கைரேகையில் எந்த வரிகளும் இல்லை. இறந்தவரின் கைரேகையில்தான் வரிகள் இருக்காது. எனவே,ஜெயலலிதா இறந்த பின்பே அந்தக் கைரேகை எடுக்கப்பட்டுள்ளது.
5.12.2016 அன்று ஜெயலலிதா இறந்ததாக மருத்துவ குறிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், 27.10.2016 அன்று தேர்தல் ஆணையத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அவரது கைரேகையில் எந்த வித வரிகளும் இல்லை. எனவே அதுகுறித்து தடய அறிவியல் சோதனை செய்ய வேண்டும் எனக் கோரி நாளை மனுத்தாக்கல் செய்யவுள்ளோம். டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்பாக, சொல்லப்போனால் அக்டோபர் 27ம் தேதிக்கும் முன்பாகவே ஜெயலலிதா இறந்திருக்கலாம். எனவே அதனை மறைத்தே மருத்துவ அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஜெ. இறந்த பின்பே கைரேகை எடுக்கப்பட்டுள்ளது! ஜெ. இறந்த பின்பே கைரேகை எடுக்கப்பட்டுள்ளது! Reviewed by நமதூர் செய்திகள் on 03:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.