கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்பு!

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்பு!

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கோவாவைச் சேர்ந்த சனாதன சன்ஸ்தா என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்பு ஒன்று ஈடுபட்டதாக அந்த வழக்கில் நேற்று (நவ-23) பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனார்.
இது தொடர்பாக பெங்களுரூவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவரது வீட்டில் வைத்து அடையாளந்தெரியாத சிலரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த விசாரணையில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 9,235 பக்கங்களுக்குக் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கின் விசாரணை நடந்து வரும் சிறப்பு புலனாய்வு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.பாலன் கூறுகையில். வழக்கின் குற்றப்பத்திரிகையானது குற்றம் புரிந்துள்ள அமைப்புச்சார்ந்துள்ள நபர்கள் எனவும் கோவாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பான சனாதன சன்ஸ்தா என்ற அமைப்பைச் சேர்ந்த நபர்கள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கோவாவில் செயல்படும் சனாதன சன்ஸ்தா என்ற அமைப்பின் உறுப்பினர்கள்தான் பகுத்தறிவாளர்களான நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த பன்சாரே ஆகிய இருவரையும் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் மகாராஷ்டிரா பயங்கரவாத ஒழிப்புப்படையினரால் கைப்பற்றப்பட்டன. இக்கொலையில் சனாதன சன்ஸ்தா அமைப்பா அல்லது அதனுடன் சம்பந்தப்பட்டுள்ள வேறு அமைப்புகள் ஈடுபட்டனவா எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு தெளிவாகத் தெரிவிக்கவில்லை. குற்றப்பத்திரிகை குறித்து மேலும் தகவல்களைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொள்ளச் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்பு! கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 00:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.