மின்மயம்: இலக்கை எட்டாத பிரதமர் திட்டம்!

மின்மயம்: இலக்கை எட்டாத பிரதமர் திட்டம்!

இந்தியாவின் அனைத்து வீடுகளையும் மின்மயமாக்கும் திட்டத்திற்கான கால வரம்பு முடிவடையவுள்ளது.
மின் தேவையுள்ள வீடுகள் பட்டியலில் ஒரு கோடி வீடுகளை அரசு நீக்கிவிட்டது. இதனால் அரசின் இலக்கு மேலும் எளிதாகிவிட்டது. மின் வசதிகள் இல்லாத காரணத்தால் கிராமங்களை விட்டு மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகச் சில ஆய்வுகள் அளித்த தகவலின் பேரிலேயே அரசின் இலக்கு சுருக்கப்பட்டது.
டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து வீடுகளையும் மின்மயமாக்க அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதற்கான காலம் முடிவடையவுள்ள சூழலில் இலக்கு எட்டப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 4 கோடி வீடுகளுக்கு மின் வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, இந்த இலக்கு 3 கோடியாகக் குறைக்கப்பட்டது. அரசு வெளியிட்டுள்ள தகவல்படி, இதுவரை இலக்கில் 72 சதவிகித வீடுகளுக்கு மட்டுமே மின் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி வழங்கப்பட்டுவிடும் என கடந்த மாதமே மத்திய மின்சக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்திருந்தார். டிசம்பர் இறுதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசு தனது இலக்கை எட்டாமலிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்தின் இலக்கு, வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. அந்த இலக்கையும் அரசு எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பொதுத்தேர்தல் வரவுள்ள சூழலில் அரசின் இலக்குகள் நிறைவேறாமல் இருப்பது அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

https://minnambalam.com/k/2018/12/10/33

மின்மயம்: இலக்கை எட்டாத பிரதமர் திட்டம்! மின்மயம்: இலக்கை எட்டாத பிரதமர் திட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.