அமித்ஷாவே வெளியேறு - கட்சிக்குள் எதிர்ப்புக் குரல்!

அமித்ஷாவே வெளியேறு - கட்சிக்குள் எதிர்ப்புக் குரல்!
புதுடெல்லி (13 டிச 2018): பாஜகவின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று அமித்ஷா கட்சி தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்று பாஜகவினர் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் மோடி அமித்ஷா கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று பரவலாக பேசப் பட்டது. அதனை பல மாநில வெற்றிகளும் நிரூபித்தன. ஆனால் சமீபகாலமாக பாஜக தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது.
குறிப்பாக சமீபத்திய ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் தோல்வி பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெயருக்கு ஒரு மாநிலமாவது கிடைத்திருந்தால் கொஞ்சம் ஆசுவாசப் பட்டிருப்பார்கள். ஆனால் எந்த மாநிலமும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. மேலும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றாலும் எப்படியாவது சிறிய கட்சிகளை வளைத்துப் போட்டு ஆட்சி அமைக்கும் தந்திரமும் அமித்ஷாவிடம் தற்போது வேலைக்கு ஆகவில்லை. மத்திய பிரதேசத்தில் கைக்கு எட்டும் அளவு சென்று கை நழுவிப் போனதால் பெரும் அதிர்வை எற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமித்ஷா தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பாஜக தொண்டர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
அமித்ஷாவே வெளியேறு - கட்சிக்குள் எதிர்ப்புக் குரல்! அமித்ஷாவே வெளியேறு - கட்சிக்குள் எதிர்ப்புக் குரல்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.