கஜா: போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை!

கஜா: போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை!

கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது .
2017ஆம் ஆண்டு கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சூறையாடியது. புயலில் சிக்கி சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்தன. இதனால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு போராடினர். அப்போது அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது .
இந்த வழக்கு விசாரணை தற்போது வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை இன்று (மே 10) விசாரித்த நீதிபதி இளந்திரையன் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
கஜா: போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை! கஜா: போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை! Reviewed by நமதூர் செய்திகள் on 04:35:00 Rating: 5

No comments:

Powered by Blogger.