பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஓவாய்சி கட்சி போட்டி


ஐதராபாத், செப். 12-

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹதுல் முஸ்லிமின் (எம்.ஐ.எம்.) கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவாய்சி அறிவித்துள்ளார்.

இதுபற்றி ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பீகார் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். ஆனால், அராரியா, புர்னியா, கிஷன்கஞ்ச், கத்திகர் ஆகிய முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாஞ்சல் பிராந்தியத்தில் மட்டும் போட்டியிடுவோம். எங்களின் பலம், பலவீனம் பற்றி எங்களுக்கு தெரியும். சீமாஞ்சல் பிராந்தியத்தின் நலன் மற்றும் நீதிக்காக போட்டியிடுகிறோம்.
பீகாரின் வளர்ச்சி அளவுருக்கள் மோசமாக உள்ளன. சீமாஞ்சல் மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தான், பிராந்திய வளர்ச்சிக் கவுன்சில் அமைக்கவேண்டும் என விரும்புகிறோம். இந்த பிராந்தியம் வளர்ச்சி அடையாததற்கு காங்கிரஸ், பா.ஜனதா, நிதிஷ் குமார் மற்றும் பிற கட்சிகள்தான் காரணம். 

இவ்வாறு அவர் கூறினார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஓவாய்சி கட்சி போட்டி பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஓவாய்சி கட்சி போட்டி Reviewed by நமதூர் செய்திகள் on 06:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.