வி.களத்தூரில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.
வி.களத்தூரில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.
வி.களத்தூரில் இன்று (30.03.2014) மாலை 5.30 மணியளவில் அ.இ.அ.தி.மு.க வின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் திரு. R.P. மருதராஜா அவர்கள் பிரச்சாரம் செய்தார். முதலில் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்து பிறகு அனைத்து தெருக்களிலும் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் அவர் பேசும்போது கடந்த முறை வெற்றி பெற்ற இந்த தொகுதி எம்.பி எத்தனை முறை உங்கள் ஊருக்கு வந்தார், அவரை எத்தனை முறை நீங்கள் சந்தித்தீர்கள் இப்படி வெற்றி பெற்றபின் தொகுதியின் பக்கமே வராதவர்களுக்கா உங்கள் ஓட்டு என்று கேட்டார்.
இந்த பிரச்சாரத்தின்போது வி.களத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களின் அதிமுக கழக பொருப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
நன்றி : கல்லாறு.காம்
வி.களத்தூரில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.
Reviewed by நமதூர் செய்திகள்
on
07:02:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
07:02:00
Rating:





No comments: