இரு தரப்பு மோதலால் லப்பைகுடிக்காட்டில் பதற்றம்....
இரு தரப்பு மோதலால் லப்பைகுடிக்காட்டில் பதற்றம்....
குன்னம்,: குன்னம் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் மண்டபம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு கிராமத்தில் மேற்கு ஜமாத் பள்ளி வாசல் அருகே வருவாய்த் துறையினருக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தை அதே ஊரைச் சேர்ந்த அப்துல்சலீம் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு அனுபவ பாத்தியத்தில் பட்டா பெற்றார்.
பொது இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா மாற்றம் செய்து உரிமை கொண்டாடினால் செல்லாது என்பதால் அந்த இடத்தை மேற்கு ஜமாத்திற்கு தான செட்டில்மென்ட் முறையில் கடந்த 2008ம் ஆண்டு எழுதி கொடுத்தார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட இடத்தில் மேற்கு ஜமாத் பொதுமக்கள் சார்பில் உணவு விருந்து மண்டபம் கட்டுவதற்காக முதற்கட்ட பணி நடந்தது.
இதனையறிந்த கிழக்கு ஜமாத் பொதுமக்கள் ஊருக்கு பொதுவான குளம் உள்ள இடத்தையொட்டி உள்ள சம்மந்தப்பட்ட இடத்தை நீங்கள் மட்டும் உரிமை கொண்டாடும் விதமாக உணவு விருந்து அளித்திடும் மண்டபம் கட்ட கூடாது. பொது இடத்திற்கு வழங்கிய பட்டாவை வருவாய்த்துறையினர் ரத்து செய்ய வேண்டும் என தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது தொடர்பாக பெண்ணக்கோனம்(வடக்கு) விஏஓ மனோகரன் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் லப்பைக்குடிகாடு மேற்கு ஜமாத் பகுதியை சேர்ந்த சுல்தான்மொய்தீன், குலாம்காதர், ஷாஜீப்தீன், முகமதுபாரூக், சம்சுதீன், மீரா மொய்தீன், அன்வர்பாஷா ஆகியோர் உட்பட 10 பேர் மீதும், கிழக்கு ஜமாத் பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில், ஜாபர்உசேன், சம்சுதீன், ஹாதி, சைவுகர்அலி, அகமதுஉசேன் ஆகியோர் உட்பட 10 பேர் மீதும் என மொத்தம் 20 மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட சப் கலெக்டர் மதுசூதனரெட்டி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த பிரச்னை தொடர்பாக இருதரப்பினரும் அடிக்கடி மோதிக் கொள்வதோடு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இனி வரும் காலங்களில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது. தற்போதுள்ள நிலை மறு உத்தரவு வரும் வரை நீடிக்க வேண்டும் என்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினகரன்
இரு தரப்பு மோதலால் லப்பைகுடிக்காட்டில் பதற்றம்....
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:12:00
Rating:
No comments: