கல்வி மற்றும் அரசு பணிகளில் சமூக ரீதியான பிரதிநிதித்துவம் பற்றிய வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!
கல்வி மற்றும் அரசு பணிகளில் சமூக ரீதியான பிரதிநிதித்துவம் பற்றிய வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!
முஸ்லிம்களுக்கு 3.5% உள்இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பாதிப்படைகிறார்கள் என்று மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சேர்க்கப்பட்ட முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி நிலையில் முன்னேற்றம் அடையாத நிலையில் தான் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி நிலைகளை ஆய்வு செய்த சச்சார் கமிஷன் தனது அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட ஹிந்து சமூத்தினரை விட பின்தங்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அமுலில் இருந்த 30% இடஒதுக்கீட்டை பிரித்து முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 26.5% இடஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடும் பிரித்து வழங்கப்பட்டது. முஸ்லிம்களை பிற்படுத்தபட்ட சமூகங்களில் இருந்து பிரித்து விட்ட நிலையில் 26.5% சதவீதமாக குறைக்கப்பட்ட இடஒதுக்கீட்டினால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. முஸ்லிம்களுக்கு 3.5% உள் இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என்ற நிலையில் மாண்புமிகு தமிழக அரசு முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு முட்டுகட்டை போடும் விதமாக பிற்படுத்தப்பட்டோர்கள் பாதிப்படைகிறார்கள் என்று மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பல்வேறு கமிஷன்களை அமைத்து துல்லியமாக தகவல்களை சமர்பித்த பின்பே இடஒதுக்கீட்டிற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரும் போது, எவ்வித ஆய்வும் நடத்தாமல் சாதாரணமாக வழக்கு தொடுப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்குகிற செயலாகும். மேலும் இந்த இடஒதுக்கீடு பிரச்சனையை வைத்து சில தீய சக்திகள் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகின்றனர். இதனை தடுக்க மாநிலத்தில் கல்வி மற்றும் அரசு பணிகளில் சமூக ரீதியாக உள்ள பிரதிநிதித்துவத்தை குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்து முஸ்லிம்கள் மற்றும் பிற சமூகத்தின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும்.
இப்படிக்கு
ஏ.எஸ். இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
கல்வி மற்றும் அரசு பணிகளில் சமூக ரீதியான பிரதிநிதித்துவம் பற்றிய வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:16:00
Rating:
No comments: