அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் மேல்நிலைக்கல்வி பயில நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பயில நிதியுதவி பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள், 2 மாணவிகள் என மொத்தம் 10 மாணவ, மாணவிகள் தொடர்ந்து 11-ம் வகுப்பை தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து பயில விரும்பும்பட்சத்தில், அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மாணவர் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு கல்விக் கட்டணம் ரூ. 8,000-ம், பராமரிப்புக் கட்டணம் ரூ. 3,650-ம், விடுதிக் கட்டணம் ரூ. 15,000-ம், சிறப்பு பயிற்சிக் கட்டணம் ரூ. 1,500-ம் என மொத்தம் ரூ. 28,000 வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ. 56,000 நிதியதவி வழங்கப்படுகிறது.
இத்தகுதியுடைய மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் மேல்நிலைக்கல்வி பயில நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:16:00
Rating:
No comments: