370-வது பிரிவு செயலிழந்தால் கஷ்மீருடனான உறவு பாதிக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!


மத்திய அரசையும், ஜம்மு-கஷ்மீரையும் இணைக்கும் முக்கியப் பாலமாக அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு செயலிழந்தால், இருவருக்குமான உறவு செயலிழக்கும் என்று கஷ்மீர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எம்.ஒய். தாரிகமி கூறினார்.
இது குறித்து ஸ்ரீநகரில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
உடம்புடன் தலையை இணைக்கும் பிரதான ரத்தநாளத்தைப் போன்றது பிரிவு 370. மத்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீருக்கும் இடையிலான உறவில் முக்கியப் பங்கை இந்தப் பிரிவு வகிக்கிறது. இந்தப் பிரிவு வலுவிழந்தால் அதனால் உருவான உறவும் செயல் இழந்துவிடும்.
பிரிவு 370-ஐ ரத்துசெய்யப் போவதாக வெளியாகும் கருத்துகள் கண்டிக்கத்தக்கவை. ஜம்மு- கஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் மக்களின் உணர்வைத் தூண்டிவிடும் நோக்கத்துடனே இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகள் வெளியாகின்றன.
பிரிவு 370-இன் ஷரத்துகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் முந்தைய மத்திய அரசுகள் பல்வேறு மாற்றங்களை இதில் செய்தனர். இதனால் இங்குள்ள மக்களின் நம்பிக்கையை இழுந்துவிட்டனர். அதைத் திரும்பப் பெறவேண்டும் என்றால் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தற்போதைய மத்திய அரசு பிரிவு 370-ஐ வைத்து சூதாட நினைக்கக்கூடாது என்று தாரிகமி கூறினார்.
370-வது பிரிவு செயலிழந்தால் கஷ்மீருடனான உறவு பாதிக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! 370-வது பிரிவு செயலிழந்தால் கஷ்மீருடனான உறவு பாதிக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.