ஃபேஸ்புக்: வாலிபர் அடித்துக்கொலை-பயங்கரவாதிகள் வெறிச்செயல்!


மும்பை: பால் தாக்கரே மற்றும் சத்ரபதி சிவாஜி குறித்து தவறான புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்ததாக கூறி கணினி வல்லுனர் ஒருவரை அடித்துக்கொலை செய்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் 7 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சோலாப்பூரில் வசித்து வந்தவர் கணினி வல்லுனர் ஷேக் முஹ்ஸின் சாதிக். இவர், மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோர் குறித்து தவறான புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்ததாக வதந்தி ஒன்று பரவியது. உண்மையில் அவர் தன்னுடைய அக்கவுண்டில் அவ்வாறு புகைப்படம் ஏதும் அப்லோட் செய்திருக்கவில்லை.
இவர் கடந்த திங்கள் அன்று மசூதியில் தொழுதுவிட்டு தன் இரு நண்பர்களுடன் வெளியே வரும் வேளையில், கும்பல் ஒன்று கம்பு, கம்பி முதலான ஆயுதங்களுடன் வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது.
இதில் ஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இக்கொடுஞ்செயல் தொடர்பாக, ஹிந்து ராஷ்ட்ர சேனா என்ற ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள்மீது, இந்திய குற்றவியல் சட்டம் 302(கொலை), 307(கொலை முயற்சி) மற்றும் 147(கலவரம் உருவாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி: Times Now
"வழக்கு கிரைம் பிராஞ்சிற்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. யாரும் வதந்திகளைத் தயவுசெய்து நம்பவேண்டாம்" என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்: வாலிபர் அடித்துக்கொலை-பயங்கரவாதிகள் வெறிச்செயல்! ஃபேஸ்புக்: வாலிபர் அடித்துக்கொலை-பயங்கரவாதிகள் வெறிச்செயல்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.