பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வி களத்தூரை சேர்ந்தவர் கைது
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
வேப்பந்தட்டை அருகே உள்ள வண்ணாரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி வி.களத்தூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் செல்வம் (34) பலாத்காரம் செய்ய முயன்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, செல்வத்தை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வி களத்தூரை சேர்ந்தவர் கைது
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:50:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:50:00
Rating:

No comments: