எரியும் கொள்ளிக்கு பயந்து எண்ணை சட்டியில் விழுந்தது போல!
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், மக்களுக்கு எதிரான் செயல்கள், விலைவாசி பிரசனை ஆகியவைகளால் அதிருப்பதி அடைந்த பொதுமக்கள்,
பி.ஜே.பி-க்கு ஆதரவளித்து, அறுதிப் பெரும் பான்மையுடன் அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி இருகிறார்கள்.
பி.ஜெபி-அரசு தட்டிகேட்க ஆளில்லை என்ற மிதப்பில் மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல், தான் தோன்றிதனமாகவும், தன்னிச்சையாகவும் ,செயல்பட ஆரம்பித்து உள்ளதை அதன் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன.
எரிவாயு சிலிண்டர் விலையை ரூ 250 வரை உயர்த்த போவதாகவும், மண்ணெண்ணெய்,பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தங்கள் விருப்பபடி உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கவும் ஆலோசித்து வருகிறது போதா குறைக்கு மக்களுக்கு அளித்துவரும் மானியங்களை குறைத்தும், வழங்காமல் மறுக்கவும் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன.
இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும், தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கும், இந்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. உற்பத்தி பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரி சலுகை, மின்சாரம், குறைந்த வட்டியில் கடன், குறைந்த மதிப்பீட்டில் நிலம் வழங்கி, அந்நிய சக்திகளின் கொள்ளை லாபத்துக்கும்,சுரண்டலுக்கும் அனுமதி அளித்து வருகிறது.
ஆனால், தனது சொந்த நாட்டு மக்களுக்கு இந்திய அரசு, சூடு வைக்கிறது. அவர்களது வாழ்க்கையை வளபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வராமல், மேலும் மேலும் அவர்களுக்கு பதிப்புகளை ஏற்படுத்தவே முனைந்து செயல்படுகிறது.
பி.ஜே.பி-அரசு ரயில்வேதுறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது இதனால் இலட்சக் கணக்கான இந்திய தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைபு, வருமானம் எதிர்காலம் கேள்வி குறியாகும், இரயில் போக்குவரத்தை நம்பியுள்ள,கோடிக் கணக்கான மக்களின் வாழ்வும் பாதிக்கப்படும் அபயம் ஏற்பட்டு உள்ளது.
பொதுவாக முதலீடு செய்யும் எந்த முதலாளியும்,எந்தஒரு நிறுவனமும் தனது முதலீட்டுக்கு ஏற்ப அதிக லாபத்தை எதிர்பார்ப்பது வியாபார நியதியாகும். லாபத்தை எதிர்நோக்கி முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டுக்கு ஏற்ப அதிக லாபத்தை அடைய வேண்டி முதலீடு செய்யும் துறையின் நிர்வாகத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் குறுக்கீடு செய்வது தவிர்க்க இயலாததாகும்.
இரயில்வேயில் முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்கள் முதலில் அதிகமாக தொழிலாளர்களை வேளையில் இருந்து நீக்குவார்கள், பயணிகளின் வசதியை அதிகரிப்பதாக கூறி, இரயில் கட்டணத்தை தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்துவார்கள், சரக்கு இரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படும். உணவுப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கூட சிரமமாகும்
இதனால்,, செயற்கையான தட்டுப்பாடும், அதன் தொடர்ச்சியாக பொருட்களின் விலையேற்றமும் வரலாறு காணாத வகையில் உயரும் நிலை ஏற்படும். எல்லாவற்றிலும் கொள்ளை லாபமும்,சுரண்டலும் நடக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு அப்பாவி பொதுமக்களின் உழைப்பும் வாழ்க்கையும் பலியாகும்.
எந்த காரணத்திற்க்காக பொதுமக்கள் காங்கிரசை வெறுத்து, பி.ஜே.பி-அரசை கொண்டுவந்தார்களோ, அதனை பி.ஜே.பி அரசு காங்கிரசை விட வேகமாக செய்ய முனைந்து வருகிறது. இதனை பார்க்கும் போது, எரியிற கொள்ளியில் தலையை சொறிவதற்கு பயந்து எண்ணைச் சட்டியிலே விழுந்துவிட்ட கதைபோல தெரிகிறது, இந்திய மக்களின் நிலை !
நன்றி : எல்லைகள்
எரியும் கொள்ளிக்கு பயந்து எண்ணை சட்டியில் விழுந்தது போல!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:58:00
Rating:
No comments: