Dec 06 : பெரம்பலூரில் தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டம்.

 இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் பெறுவதற்காகவும், பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவில் முடித்து வைப்பதற்காகவும், இடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவும் கடந்த 19 ஆண்டுகளாக தமுமுக தொடர் போராட்டங்களை நடத்திவருவது அனைவரும் அறிந்ததே.
20வது ஆண்டாக இந்த வருடம் டிசம்பர் 1 முதல் 5 வரை லட்சக்கணக்கான அஞ்சல் அட்டைகள் கோரிக்கை மனுவாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு வந்தன. 
இன்று தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களிலும் கருஞ்சட்டை அணிந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி பெரம்பலூரில் தமுமுகவினர் கருப்பு சட்டை அணிந்து காலை 11 மணியளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மீரா மைதீன் தலைமை தாங்கினார்.
கண்டன உரையை முத்துபேட்டை மாலிக் நிகழ்த்தினார்.
இதில் பல தமுமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.





Dec 06 : பெரம்பலூரில் தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டம். Dec 06 : பெரம்பலூரில் தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டம். Reviewed by நமதூர் செய்திகள் on 23:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.