அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் ! உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

மதுரையில் 2011 முதல் பல்வேறு இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடராக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு பலவித சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனை அறிந்த மதுரைவாழ் மக்கள் ஜமாத்தின் துணையுடன் சட்ட ரீதியான போராட்டமும், மக்கள்திரள் போரட்டமும் நடத்தினர். இதனிடையே கடந்த வருடம் காவல்துறை அதிகாரி ஒருவர் “அனைத்து குண்டு வைப்பு சம்பவங்களின் பின்னணியிலும் உளவுத்துறை அதிகாரிகள் இருப்பதாக தெரிவித்தார்”. இந்த செய்தி பத்திரிகைகளில் பரவலாக வெளிவந்ததை அனைவரும் அறிவர். அதனை தொடர்ந்து கைதுகளும் விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளை அழைத்து செல்லும் நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் மீண்டும் கடந்த இரண்டு வாரங்களாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யும் படலம் துவங்கியுள்ளது.இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் வெடிக்காத குண்டுகளை வைப்பதும் அதனை ,கண்டுபிடிக்கும் நிகழ்வுகளும் காவல்துறையின் Q (க்யூ)பிரிவிற்கும் உளவுதுறையினருக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டியினால் சில அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே காவல்துறை அதிகாரியின் மூலம் வெளிவந்த உண்மைகளை ஆய்வு செய்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசும் காவல்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு இது விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி இந்த சதிச் செயல்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதுடன் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் ! உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை! அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் ! உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.