பிரியா பிள்ளை மீதான பயண தடை ரத்து : பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு!

தில்லி : பசுமை ஆர்வலர் பிரியா பிள்ளைக்கு எதிராக உளவுத்துறை(Intelligence Bureau)அறிவித்த கண்காணிப்பு உத்தரவுஅவசியமற்றது என தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரிஃப் வரவேற்றுள்ளார்.
பணம் படைத்தவர்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படவும், நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பவர்களை “தேசவிரோதிகள்” என அடையாளப்படுத்தவும் செய்கின்ற தற்போதைய ஆளும் அரசிற்கு உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மரண அடியாக அமைந்துள்ளது.
நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரின் பெயரை நீக்குமாறு அரசிற்கு மிகச்சரியாக உத்தரவிட்ட இத்தீர்ப்பு உரிமை போராளிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது என தலைவர் கூறினார்.

அரசின் கொள்கைகளுக்கு எதிராக கருத்து கொண்டிருப்பதனால் ஒருவரை தேசவிரோதி என்று அடையளப்படுத்திவிட முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டு சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட கருத்துடையவர்களுக்கு எதிராக அதிகார வர்க்கத்தினரிடம் வளர்ந்துவரும் சகிப்புதன்மையின்மை மற்றும் மக்கள் ஆதரவு பெற்ற நியாயமான போரட்டங்களுக்கு எதிராக படைகளை பயன்படுத்தும் போக்கு போன்றவற்றிற்கு எதிரான ஒரு எச்சரிக்கையாகவே அவர்கள் இத்தீர்ப்பினை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இத்தீர்ப்பு இந்திய நீதித்துறையை வலுப்படுத்துவதாகவும் உள்ளது என கே.எம்.ஷெரிஃப் கூறினார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/71786#sthash.irhI2eXp.dpuf
பிரியா பிள்ளை மீதான பயண தடை ரத்து : பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு! பிரியா பிள்ளை மீதான பயண தடை ரத்து : பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 22:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.