முர்ஸிக்களுடைய முர்ஸி சஹீத் செய்யது குத்துப் – அப்பாஸ்
மேற்கின் எதிரி வீழ்ந்து விட்டார்,
மேற்கின் எதிரி வீழ்ந்து விட்டார்!
மேற்கின் எதிரி வீழ்ந்து விட்டார்!!!
இந்த ஆரவாரத்தால் அமெரிக்க வீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது ஆனால் இந்த ஆரவாரங்களுக்கு இடையில் ஏற்கனவே இன்னொரு எதிரி மறுபிறப்பு எடுத்திருந்தார்.
எகிப்தின் அசையித் மாகாணத்தில் மூஸா என்ற கிராமத்தில் பிறந்த சைய்யது குதுப் தொடக்க கல்வியை தனது கிராமத்திலேயே பூர்த்தி செய்தார்கள் மேல் படிப்பிற்காக கைரோவில் உள்ள தாருல் உலூம்மில் இணைந்து இலக்கிய துறையில் பட்டம் பெற்றார்கள், எகிப்தின் தாவுதிய கல்லூரியில் சிலகாலம் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருந்த அவரை எகிப்தின் கல்வி அமைச்சகம் அமெரிக்காவிற்கு அனுப்பி,அமெரிக்க கல்வி முறையை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க அனுப்பியது.
அமெரிக்காவில் இருந்த இரண்டு ஆண்டுகள் அமெரிக்க மக்களின் கல்வி,கலாச்சாரம்,பண்பாடு எனஅனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் தான் மேற்கு உலகம் முழுக்க அந்த ஆரவாரம் அரங்கேறியது, மேற்குலகின் தலைமைபீடமான அமெரிக்க வீதிகளையும் அந்த ஆரவாரம்
விட்டுவைக்கவில்லை, அமெரிக்க வீதிகள் முழுக்க ஒரே குரல், மேற்கின் அபாயகரமான எதிரி வீழிந்து விட்டார் ,இந்த ஆரவரதிர்கான காரணம் இமாம் ஹசன் அல் பன்னா சஹித் ஆக்கப்பட்ட செய்தி அமெரிக்க வீதிகளை ஆரவாரத்திற்கு இட்டு சென்றிருந்தது,
அப்போது அமெரிக்காவில் இருந்த செய்யத் குத்துப் அவர்களுக்கு அமெரிக்கர்களின் இந்த எதிர்வினை மிகப்பெரிய வியப்பாகவும், அதேநேரத்தில் ஒரு தனிநபரின் மரணத்திற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆரவாரம் என்ற கேள்வியும் அவருள் மிக ஆழமாக எழுந்துவிட்டது, சுருங்க சொன்னால் ஒரு சஹிதின் மரணத்தில் இன்னொரு சஹித் உயிர்தெழுந்தார்.
தனது பணியை முடித்து நாடு திரும்பிய குத்துப் அவர்கள், அப்பாஸ் மஹ்முத் அவர்கள் மூலமாக இமாம் ஹசனல் பன்னா குறித்தும் இஹ்வான்கள் குறித்தும் ஆழமாக தெரிந்து கொண்டார்கள்.
1953 இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு பணியாற்ற தொடங்கினார்கள், ஏனைய இஹ்வான்கள் அவரை மதிப்புடன் வரவேற்றனர் காரணம் அவர் அரபு இலக்கியங்களை கரைத்து குடித்தவர் ,மேற்குலகின் தத்துவத்தையும்,சமூகசிந்தனைகளையும் மிக ஆழமாக கற்றவர் என்பதனால், ஆனால் செய்யத் குதுப் அவர்களோ இஸ்லாமிய தவாவை சுமப்பதர்கான தகுதி தமக்கு போதாது என்று கருதினார். பின்னர் குத்துப் அவர்கள் இஸ்லாமிய தர்பியாவில் தம்மை முழுமையாக ஈடுபடுதிகொண்டார். ஆதலால் இஸ்லாத்தின் பண்புகளின் மூலம் தன்னை மேருக்கேற்றிக்கொண்டார்.
1954 ஜமால் அப்துல் நாசர் அரசினால் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் தடைசெய்யப்பட்டது, அதில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் செய்யது குதுப்பும் சேர்த்து கைது செய்ய பட்டார்,
கைது செய்யபட்ட இரண்டு மாதங்களில் விடுவிக்க பட்ட குதுப் அவர்கள் மீண்டும் ஜமால் அப்துல் நாசரை கொலை செய்ய முயன்றார் என்ற பொய் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு கொடும் சிறையில் தள்ளப்பட்டார். சிறை கூடத்தில் அல்லாஹ்வின் எதிரிகளுடைய அணைத்து சித்திரவதை மொழிகளும் செய்யத் குதுபின் மீது பிரயோகிக்கபட்டது. அனைத்து சித்திரவதைகளையும் இறைவனுக்காக மனவுவந்து சகித்துக்கொண்டார் குதுப் அவர்கள்.
ஆனால் அதே சிறைக்கூடத்தில் தன்மீது பிரயோகிக்கப்பட்ட அணைத்து அநீதிகளுக்கும் இலக்கண பிழையின்றி வேறு மொழிகளில் அவர்கள் எதிர்வினை ஆற்றிகொண்டிருந்தார்கள். ஆம் 1400 ஆண்டுகளுக்கு முன் எந்த வேதத்தை உயர்த்திபிடித்ததால் ஒரு சமூகம் சொல்லொண்னா துயரத்தை சந்தித்தபோதும் தாம் உயர்த்திபிடித்த வேதத்திற்கு வாழ்வியல் விரிவுரையாய் இருந்ததோ, அதே வேதத்தை 1400 ஆண்டுகளுக்கு பின்னால் இஹ்வான்கள் உயர்த்தி பிடித்தால் கஷ்டங்களை அனுபவித்த செய்யத் குதுப் அவர்களும் அந்த திருமறைக்கு விரியுரை எழுதி கொண்டிருந்தார்.
அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் இறையாகிக்கொண்டிருந்தபோது வான்மறைக்கு விரிவுரை எழுதியதாலோ என்னவவோ அடக்குமுறைகளையும் கொடுகோன்மைகளையும் தகர்த்தெறிந்து சுதந்திரத்தையும் இறைநீதியையும் நிலைநாட்ட துடிக்கும் களப்போராளிகளை இன்றளவும் அவர் எழுதிய ஃபிலிலாலில் குர்ஆண் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது,
இந்த தப்சீரின் முன்னுரையில் செயத் குதுப் சொல்கிறார்கள்:
“நான்முயற்சித்து இருப்பதெல்லாம் குரானை எனது ஆன்மாவில் இருந்தும், என்னை குரானின் ஆன்மாவில் இருந்தும் பிரித்து நமக்கு குரானுக்கும் இடையில் திரைபோடும் விசயங்களின் பால் கவனம் செலுத்தாமல் குரானின் மூல வசனம் எதை உணர்த்துகிறதோ அதையே நான் கவனத்தில் கொண்டேன்” என்கிறார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குதுப் அவர்கள் இன்னும் உத்வேகத்துடன் இயக்க பணிகளை தொடர்ந்தார்கள், இந்த காலகட்டத்தில்தான், நவீன இஸ்லாமிய எழுச்சிக்கான வழிமுறைகளை வகைபடுத்தும் மாலிம் அல் தாரிக் (மைல்கற்கள்) என்னும் புரட்சிகரமான நூலை எழுதினார்கள்.
இந்த நூலை ஜமால் அபுதுர் நாசர் படித்தாரோ என்னவோ இறுமாப்புடன் அவர் இருக்கையில் அவரால் அமரமுடியவில்லை தனது ரஷ்ய சுற்றுபயணத்தை சுவாதினதுடன் கழிக்க முடியவில்லை அவருக்கு. அச்சமும், பதற்றமும் மேலோங்க அவசரம் அவசரமாக அவசரகால சட்டத்தை அமல்படுத்தினார். காரணம் கேட்டவர்களிடம் இந்த புத்தகம் எகிப்தின் அரசை கவிழ்க்கும் சதித்திட்டத்தை தாங்கிநிற்கிறத. இல்லை, இல்லை எகிப்தின் அரசைகவிழ்க்கும் சதித்திட்டம்தான், அத்தோடு என்னை கொலை செய்யவும் எகிப்த்தின் அரசை கவிழ்க்கவும் சதி செய்த இஹ்வான்களை இனியும் மன்னிக்க மாட்டேன் என்று ரசியாவில் சுற்றுபயணத்தில் இருந்த போதே சூளுரைத்தார்.
இதன் எதிரொலியாய் நாடுமுழுக்க சுமார் இருபத்தி நாலாயிரம் இஹ்வான்கள், செய்யது குதுபின் சகோதர சகோதிரிகள் உட்பட அனைவரும் கைது செய்யபட்டார்கள், இந்த முறை சிறைச்சாலையில் அடக்குமுறை இன்னும் அதிகம் ஆனது, கூடவே குதுபை விடுவிக்க சொல்லி சர்வதேச அழுத்தங்களும் தொடருந்தது, சர்வதேச வழக்கறிஞர்கள் குதுபிற்காக வாதாடமுன்வந்தார்கள், ஜமால் அப்துல் நாசருக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது, சர்வதேச சமூகத்திடம் தான் கட்டமைத்து வைத்திருந்த இரும்பு மனிதன் என்ற பிம்பத்தை பாதுகாக்க செய்யத் குதுபிடம் மன்னிப்பு கேட்டால் விடுவித்துவிடுவதாய் தூது அனுப்பினார்.
செயத் குதுப் அவர்கள் தீர்கமாக சொல்லிவிட்டார்கள்,
“அல்லாஹ்வின் மீதாணையாக சொல்கிறேன் நான்கோரும் மண்னிப்பு மரணதண்டனையில் இருந்து என்னை விடுவிக்கும் வலிமை உடையதாய் இருந்தாலும் நான் மன்னிப்பை கோரமாட்டேன்” என உறுதியாக சொல்லிவிட்டார்,
உடல் அளவில் ஜமால் அப்துர் நாசருக்கு ஐம்பத்து ஆறு இஞ்சு மார்பகம் கூட அல்ல அரவத்தி ஐந்திக்கும் மேலிருக்கும் அவ்வளவு வலிமையானவன். ஆனால் செயத் குத்துப் அவர்களோ மெலிந்த தேகம் உடையவர் அனாலும் அவருடைய வலிமை உடலில் இல்லை எழுத்தில் இருந்தது. காரணம் அவரின் உள்ளம் ஈமானின் முலம் உறுதிகொண்டிருந்தது.
நாசரின் அரசு குத்துப் அவர்களை வேறு வழியின்றி இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டது நீதிமன்றத்தில் நீதிபதி கேட்டார் உங்கள் மீது சுமத்த பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து உண்மையை சொலுங்கள்.
இது சம்பிரதாயமான கேள்விதான் காரணம் தீர்ப்பு முன்பே எழுத பட்டுவிட்டது, ஆனால் பதில் சம்பிரதயாமனது அல்ல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
நீதிபதியை பார்த்து செய்யது குத்துப் கேட்டார்கள், நீங்கள் உண்மையை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இதுதான் உண்மை என்று தனது மேலங்கியை கழட்டி காட்டினார்கள், சரிரம் முழுக்க இரும்பு கம்பிகளாலும், நாய்களாலும் குதறப்பட்ட விழுப்புண்கள் இருந்தன, தீர்கமாக சொன்னார்கள், மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன், என்னால் செய்ய முடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன், என் ஆயுள் நீடித்தால் நான் செய்ய ஆசைப்படும் பல விஷயங்கள் உண்டு. என்னால் அது முடியாமல் போனாலும் கவலை இல்லை பின் வருபவர்கள் அதை செய்வார்கள் என்றார.
செய்யது குதுப் அவர்கள் கணித்தது போலவே மரணதண்டனை தீர்ப்பாய் வந்தது 1966 ஆகஸ்ட் 29 தூக்கு மேடை முன் நிறுத்த பட்டார் அவரை தூக்கில் ஏற்ற வந்த நபர் அவரிடம் இறுதியாக கலிமாவை முன்மொழிய சொன்னான், புன்னகைத்தவாறு அந்த மனிதர் சொன்னார் நீ சொல்லும் “லாயிலாக இல்லல்லாஹுவால் வாழ்ந்து கொண்டிருக்கிறாய், நான் லாயிலாக இல்லல்லாஹ் வாழ்வதற்காக மரணத்தை தழுவுகிறேன் என்று தீரத்துடன் பதில் உரைத்தார்.
தனது கை,கால்களை கட்ட முயன்ற சிறை வார்டனிடம் செய்யத் குதுப் கூறினார்: “அந்த கயிறை என்னிடம் தாருங்கள். எனது கை, கால்களை நானே கட்டிக்கொள்கிறேன். எனது இறைவனின் சுவர்க்கத்தில் இருந்து தப்பியோட நான் முயல்வேனா?”.
துக்கம் மேலிடும் குரலில் ராணுவ அதிகாரி கூறினார்: “செய்யத்! இனி மரணம்தான்!”. செய்யத் குதுபின் உறுதியான குரல் மீண்டும் ஒலித்தது: “யா மர்ஹபன் பில் மவ்தீ ஃபீ ஸபீலில்லாஹ்” (அல்லாஹ்வின் பாதையில் மரணத்தை வரவேற்கிறேன்) அதிகாரி அஷ்மாவிக்கு உத்தரவை பிறப்பித்தார். அவர் லிவரை அழுத்தினார். ஸய்யித் குதுப் மற்றும் அவரது தோழர்களின் உயிரற்ற உடல்கள் தூக்கு மரத்தில் தொங்கின. அந்த பரிசுத்த ஆன்மாக்கள் சுவனப் பூங்காவை நோக்கி, படைத்தவனை நோக்கி பயணித்தன”.
சில நிமிடங்களிலேயே தூக்கு நிறைவேற்றபட்டது, தனக்கு நிலையான வாழ்வினை தேடிகொண்டார் அல்லாஹ் அவருடைய பிரார்த்தனைகளை பொருந்திக்கொண்டான்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அவரால் செய்ய முடிந்த அளவுக்கு செய்துவிட்டார் அவர் செய்ய ஆசை பட்ட பல விஷயங்கள் உண்டு, அந்த விசயங்களை செய்ய முடியாமல் போனாலும் அவர் கவலை கொள்ளவில்லை , பின் வருபவர்கள் செய்வார்கள், அதாவது நாம் செய்வோம் என திடமாக நம்பினார், சஹீத் என்ற நிகர்
இல்லா நிலையை அடைந்து விட்டார்.
சுருங்க சொன்னால் சஹித் செய்யது குதுப் நவீன இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல், அதனாலேயே இந்த ஒரு ரத்த சாட்சியிடமிருந்து ஆயிரம் ஆயிரம் சஹீதுகள் உயிர்த்து எழுந்தனர்.
- அப்பாஸ்
mohamedguvera@gmail.com
- See more at: http://www.thoothuonline.com/archives/74597#sthash.GMPphVNd.dpuf
முர்ஸிக்களுடைய முர்ஸி சஹீத் செய்யது குத்துப் – அப்பாஸ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:13:00
Rating:
No comments: