சமஸ்கிருதத்துக்காக 300 குருகுலங்களை உருவாக்கும் ஆர்எஸ்எஸ்-க்கு ஸ்மிருதி இரானி ஆதரவு- புதிய சர்ச்சை


டெல்லி: நாடு முழுவதும் 300 குருகுல கல்வி நிறுவனங்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் திட்டத்துக்கு முழு ஆதரவு தருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்துள்ள தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல் சமஸ்கிருதத்துக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த நிலையில்தான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாடு முழுவதும் 300 குருகுல கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு தாம் முழு ஆதரவு தருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

3 முக்கிய குருகுலங்கள்.. இந்திய அளவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3 குருகுலங்கள் மிக முக்கியமானவை. தட்சிண கன்னடா மாவட்டத்தின் புத்தூர் தாலுகாவில் மைத்ரேயி குருகுலம்; சிருங்கேரி பிரபோதினி குருகுலம்; பெங்களூருவில் உள்ள வேத விக்ஞான குருகுலம் ஆகியவை மிக முக்கியமானவை. இந்த 3 குருகுலங்களும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதரவில்தான் நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு வந்திருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த குருகுலத்துக்கும் சென்று பார்வையிட்டார். 

அப்போது குருகுல நிர்வாகி டாக்டர் ராமச்சந்திரா பகத்தை சந்தித்த ஸ்மிருதி இரானி, குருகுலங்கள் மூலமாக சமஸ்கிருத மொழியை வலுத்தப்படுத்த நாடு முழுவதும் நிறைய குருகுலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி இரானி, நாடு முழுவதும் 300 குருகுல கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு தாம் முழு ஆதரவு தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார். ஸ்மிருதி இரானியின் இத்தகைய முயற்சி தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
சமஸ்கிருதத்துக்காக 300 குருகுலங்களை உருவாக்கும் ஆர்எஸ்எஸ்-க்கு ஸ்மிருதி இரானி ஆதரவு- புதிய சர்ச்சை சமஸ்கிருதத்துக்காக 300 குருகுலங்களை உருவாக்கும் ஆர்எஸ்எஸ்-க்கு ஸ்மிருதி இரானி ஆதரவு- புதிய சர்ச்சை Reviewed by நமதூர் செய்திகள் on 08:36:00 Rating: 5

No comments:

Powered by Blogger.