நவீன அடிமைகள் பட்டியலில் இந்தியா முதலிடம்


நவீன அடிமைகள் சர்வதேச பட்டியலில் 1.83 கோடி மக்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 
நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு ஒவ்வொரு நாட்டிலும் சதவித அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் அதிகபட்ச அடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான வாக் ப்ரீ பவுண்டேசன் நிறுவனம் குலோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான சர்வதேச நவீன அடிமைகள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
ஆய்வில் நவீன அடிமைகள் என்று கடத்தல், அடிமைத்தனம், கட்டாய உழைப்பு, குழந்தை விபச்சாரம் மற்றும் கட்டாய திருமணம் போன்றவை கருதப்படுகிறது. இதில் இந்தியாவில் மற்ற நாடுகளை அதிக அளவில் இருப்பதாகவும், உலகளவில் உள்ள 18.3 மில்லியன் இந்திய மக்கள்   அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்.
 
நவீன அடிமைகள் கொண்ட பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தாலும், கடத்தல் மற்றும் குழந்தை திருமணத்துக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நவீன அடிமைகள் பட்டியலில் இந்தியா முதலிடம்  நவீன அடிமைகள் பட்டியலில் இந்தியா முதலிடம் Reviewed by நமதூர் செய்திகள் on 06:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.