தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேணும்!: டிடிவி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை


தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேணும்!: டிடிவி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை
புதுடெல்லி: தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டுமெனவும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், டிடிவி. தினகரன் தரப்பில் சுப்ரீம் ேகார்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 2017 நவம்பர் 23ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா மற்றும் டிடிவி.
தினகரன் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்.
28ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், ‘இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்யப்படுகிறது. சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கடந்தவாரம் உச்சநீதிமன்றத்தில் டிடிவி. தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில், ‘இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பையும் ரத்து செய்ய வேண்டும்.
அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். நாங்கள் அமமுக கட்சி சார்பில் தேர்தலை சந்திக்க ஏதுவாக எங்களுக்கு இடைக்காலமாக குக்கர் சின்னத்தை ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டிடிவி. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த், ‘இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.   டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பையும் ரத்து செய்ய  வேண்டும்.
அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். தற்ேபாதைய மக்களவை தேர்தலை சந்திக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் எங்களுக்கு தற்காலிகமா குக்கர் சின்னத்தை ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும்.
அதனால், இம்மனுவை அவசரமாக விசாரித்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ‘அவசர வழக்காக விசாரிக்க முடியாது.
வழக்கு விசாரணை பட்டியலில், வருகிற 15ம் தேதி வரும்போது, அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று அறிவித்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடக்கவுள்ளதால், டிடிவி. தினகரன் தரப்பு இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேணும்!: டிடிவி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேணும்!: டிடிவி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை Reviewed by நமதூர் செய்திகள் on 04:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.