துருக்கி நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கட்சியான ஏ.கே பார்டி பெரும்பான்மை இடங்களை பெற்று வெற்றி
கடந்த ஐந்து மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது தேர்தல் இதுவாகும். சென்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நேற்று மறு தேர்தல் நடைபெற்றது.
நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (ஏகே பார்ட்டி) 49.4 சதவிகித வாக்குகளை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. தீவிர இடதுசாரி கட்சியான CHP 25.4% ஓட்டுகளும் , வலதுசாரிகளின் அமைப்பான MHP 11.9 சதவிகித ஓட்டுகளையும் பெற்றுள்ளது.
மேலும் கடந்த தேர்தலில் திடீரென வளர்ச்சி பெற்ற குர்துக்களின் ஆதரவு கட்சியான HDP 10.7% வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட குறைவான சதவிகிதமாகும். கடந்த தேர்தலில் எர்துகானின் கட்சி ஆட்சியமைக்க பெரும்பான்மை தேவைப்பட்ட நிலையில் இக்கட்சி தங்களது ஆதரவை வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி மொத்தமுள்ள 50 இடங்களில் ஏகே கட்சி 316 இடங்களை பெற்றுள்ளது. இது தனித்து ஆட்சியமைக்க போதுமான இடங்களாகும். CHP 134 இடங்களும், HDP 59 இடங்களும், MHP 41 இடங்களும் பெற்றுள்ளன. தனித்து ஆட்சியமைப்பதற்கு 276 இடங்களே போதுமானதாகும்.
ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு ஒரு நிலையான மக்கள் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என பிரதம மந்திரி அஹ்மத் தாவுத் ஓக்லு தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/75108#sthash.CpqHn2uI.dpuf
துருக்கி நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கட்சியான ஏ.கே பார்டி பெரும்பான்மை இடங்களை பெற்று வெற்றி
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:18:00
Rating:
No comments: