’யோகாவை ஏன் நிராகரிக்க வேண்டும்?’ - சீமான் கேள்வி
’யோகா தமிழர்களின் கலை. அதை ஏன் நிராகரிக்க வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான் ’யோகா உடலுக்கும் மனதுக்குமான பயிற்சி. அதில் பக்தி மதம் இருக்கிறது என்று பார்க்க வேண்டியதில்லை. யோகா தமிழர்களின் கலை. அதை ஏன் நிராகரிக்க வேண்டும். யோகா உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானது. அதற்கு மதச் சாயம் பூசக்கூடாது. யோகாவை உலகிற்கு வழக்கியவர்கள் தமிழர்கள் தான்’ என்றார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியான சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ‘ஜெயலலிதா இறந்தவுடன் உண்மையும் இறந்துவிட்டது. எனவே இனி அதை பற்றிப் பேசி பயனில்லை’ என்று முடித்துக் கொண்டார்.
’யோகாவை ஏன் நிராகரிக்க வேண்டும்?’ - சீமான் கேள்வி
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:05:00
Rating:
No comments: