காங்கிரஸ் – ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதி!
பீகாரில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் – ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் வரிசையில் காங்கிரஸ், லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் அக்கட்சிகளுக்கிடையிலான கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் காங்கிரஸ் 11 தொகுதிகளைத் தமக்கு ஒதுக்குமாறு கோரியிருந்த நிலையில், 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுமென ராஷ்டீரிய ஜனதா தளக் கட்சி கூறிவந்தது.
அந்தவகையில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுவதுடன், காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாரதிய ஜனதாக் கூட்டணியிலிருந்து பிரிந்த உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டீரிய லோக் சாம்தா கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பிற உதிரிக் கட்சிகளுக்கு எஞ்சியுள்ள தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் – ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:46:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:46:00
Rating:

No comments: