நிர்மலா ராஜினாமா செய்ய வேண்டும்: ப.சிதம்பரம்

நிர்மலா ராஜினாமா செய்ய வேண்டும்:  ப.சிதம்பரம்

ரஃபேல் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “பாதுகாப்புத் துறை அமைச்சரும், சட்ட அமைச்சரும் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக நடைபெற்றுவரும் மறு சீராய்வு வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது எனும் மத்திய அரசின் வாதத்தைத் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டது. மேலும், “இந்த மனுக்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும். எப்போது விசாரணை தொடங்கப்படும் என்பது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கிறது. ஒரு சில ஆவணங்கள் சட்ட விரோதமான முறையில் வெளியாகின. ரஃபேல் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (ஏப்ரல் 11) தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஃபேல் விமான பேரம் பற்றிய விசாரணையைத் தவிர்ப்பதற்கு பாஜக அரசு எல்லா உத்திகளையும் கையாளுகிறது. ஆனால், நீதி என்று ஒன்று இருக்கிறது. நீதியின் கரத்திலிருந்து சில நேரங்களில் தப்பிவிட்டது போல் தோன்றலாம். இறுதியில் நீதியே வெல்லும். புதன்கிழமை உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சரும் சட்ட அமைச்சரும் பதவி விலகியிருக்க வேண்டும்” என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
நிர்மலா ராஜினாமா செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் நிர்மலா ராஜினாமா செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் Reviewed by நமதூர் செய்திகள் on 22:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.