குஜராத்திளும் அமளி : ஆளுநர் உரை ரத்து!

குஜராத்தில் சட்ட பேரவைக் கூட்டத்தில் எதிர்கட்சியினரின் கடும் அமளி காரணமாக ஆளுநர் தனது உரையை பாதியில் நிறுத்தி விட்டு வெளியேறினார்.
குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டில் படேல் இனத்தவரின் போராட்டம் காரணமாக, முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் விலகினார். அதைத்தொடர்ந்து விஜய் ரூபானி முதல்வரானார். இந்நிலையில், சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, ஆளுநர் கோலி உரையாற்றத் தொடங்கினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து அவைக்கு வந்திருந்தனர். ஆளுநர் உரையைத் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து, குஜராத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கோஷங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். சபாநாயகர் ராமன்லால் வோரா எழுந்து உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அமளி நீடித்து கொண்டே இருந்ததால், ஆளுநர் தனது உரையை பாதியில் முடித்துக் கொண்டார். பின்னர் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அமளியால் ஆளுநர் உரை பாதியில் ரத்தான சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்திளும் அமளி : ஆளுநர் உரை ரத்து! குஜராத்திளும் அமளி : ஆளுநர் உரை ரத்து! Reviewed by நமதூர் செய்திகள் on 23:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.