மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பகத்சிங் துப்பாக்கி!

இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர்களில் ஒருவரான பகத்சிங் பயன்படுத்திய துப்பாக்கி அரை நூற்றாண்டாக ஒரு ஸ்டோர் அறையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1928 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங், லாலா லஜபதி ராய் மரணத்துக்கு காரணமான ஆங்கிலேய அதிகாரி ஜான் சாண்டர்சை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இந்த துப்பாக்கி கடந்த 50 ஆண்டுகளாக ஸ்டோர் அறையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது, 90 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த 32 mm கோல்ட் துப்பாக்கி, முதல் முறையாக எல்லைப் பாதுகாப்பு படையின் ரியோட்டி பயிற்சி தளத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால்,இந்த துப்பாக்கி குறித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை.
துப்பாக்கியை மக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனரே தவிர அது பகத்சிங் பயன்படுத்திய துப்பாக்கி என்பது அவர்களுக்கு தெரியவில்லை. மத்திய ஆயுதங்கள் மற்றும் உத்திகள் பள்ளி அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் அந்த துப்பாக்கியின் மேலிருந்த கருப்பு நிறத்தை எடுத்துவிட்டு,(168896) என்ற எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதுதான்,அது பகத்சிங் பயன்படுத்திய துப்பாக்கி என தெரிய வந்தது. இவருடைய தியாகம் மற்றும் தைரியம் மக்களை ஈர்த்தாலும், ஷாஹீத் பகத் சிங் என்பவருக்குதான் 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு தியாகி பட்டம் கொடுத்தது.
இந்த துப்பாக்கியை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்
மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பகத்சிங் துப்பாக்கி! மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பகத்சிங் துப்பாக்கி! Reviewed by நமதூர் செய்திகள் on 03:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.