ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன்

நந்தினி, சூர்யகலா, ஹாசினி ஆகிய 3 தலித் பெண்கள் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தற்போது அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக, தலித் பெண்கள் அதிகளவு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். நந்தினி, சூர்யகலா ஆகிய பெண்களும் ஹானிசி என்ற சிறுமியும் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அதிமுக அமைச்சரவையில் 2 தலித்துகள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். குறைந்தது 6 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். சசிகலா ஆதரவு அமைச்சரவையில் 25 தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் 2 பேருக்குத்தான் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒதுக்கும் ஓரவஞ்சக செயலாகும். அமைச்சரவையில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாக்க சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் ‘பினாமி’ ஆட்சி அமைந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன் ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன் Reviewed by நமதூர் செய்திகள் on 03:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.