வேலைநிறுத்தம் : சம்பளம் கட்!

வேலைநிறுத்தம் : சம்பளம் கட்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 19,000 பேருக்கு ஒரு நாள் சம்பளத்தைப் பிடிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு 26 மாதங்களாக வழங்கப்படாமல் தாமதமாகி வருவதாகக் கூறி, மின் வாரியத்தில் உள்ள மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட சில சங்கங்கள், கடந்த 16ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்தன. முன்னதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர், ஒரு நாள் பணிக்கு வராவிட்டாலும், அவர்களின் எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று மின் வாரியம் எச்சரித்திருந்தது. இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் அறிவித்த தேதியன்று 19 ஆயிரம் பேர் விடுப்பு எடுத்து, பணிக்கு வரவில்லை. இதனால் மின் கட்டணம் வசூல், மின் வினியோகப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 19,000 பேருக்கு ஒரு நாள் சம்பளத்தைப் பிடிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர், "வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு எட்டு நாள் சம்பளம் பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, சம்பளம் பிடிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. அதே சமயம் போராட்டம் நடந்த நாளில் பணிக்கு வராதவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் உறுதியாகப் பிடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
வேலைநிறுத்தம் : சம்பளம் கட்! வேலைநிறுத்தம் : சம்பளம் கட்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.