மோடி அரசுக்கு எதிரான வழக்குகளை சமாளிக்க மத்திய அரசு திணறல்!

மோடி அரசுக்கு எதிரான வழக்குகளை சமாளிக்க மத்திய அரசு திணறல்!
புதுடெல்லி(12 பிப் 2018): பிரதமர் மோடி அரசுக்கு எதிரான வழக்குகளை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
மோடி அரசு பதவியேற்ற பிறகு மக்கள் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் பொதுமக்களை பெரிய அளவில் பாதிப்பதால் அதனை எதிர்த்து பல்வேறு வழக்குகள் குவிந்துள்ளன.
இந்த வழக்குகளை சமாளிக்க கடந்த 4 ஆண்டுகளில் வழக்கறிஞர்களுக்கு என இரண்டு மடங்கு செலவை மத்திய அரசு செய்துள்ளது அதாவது கடந்த 2014-15 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு சார்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.28.46 கோடியாக இருந்துவந்துள்ளது. ஆனால் தற்போது 2017-18 ஆம் ஆண்டில் மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு ரூ.54.37 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் குறிப்பாக ஆதார் அட்டைக்கு எதிரான வழக்குகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வழக்குகள், முத்தலாக்கிற்கு தடை சட்டத்திற்கு எதிரான வழக்குகள் என மொத்தம் 3.13 கோடி வழக்குகள் உள்ளன. மேலும் 46 சதவீத வழக்குகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து எதிர்கொண்டு வருகின்றனர். அதிகபட்சமாக 70 ஆயிரம் வழக்குள் ரயில்வே துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக சுமார் 1500 வழக்குகள் மத்திய நிதித்துறை அமைச்சகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
மோடி அரசுக்கு எதிரான வழக்குகளை சமாளிக்க மத்திய அரசு திணறல்! மோடி அரசுக்கு எதிரான வழக்குகளை சமாளிக்க மத்திய அரசு திணறல்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.