ஆணவக்கொலைக் கொடுமை பேசும் முந்திரிக்காடு!

ஆணவக்கொலைக் கொடுமை பேசும் முந்திரிக்காடு!

ஆணவக்கொலையை மையமாகக் கொண்டு இயக்குநர் களஞ்சியம் முந்திரிக்காடு எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
பூமணி, மிட்டா மிராசு, நிலவே முகம் காட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய களஞ்சியம் தற்போது இயக்கிவரும் முந்திரிக்காடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் மகன் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சுபப்ரியா நடிக்கிறார். சீமான் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஜெயராவ், சோமு, சக்திவேல், கலைசேகரன், பாவா லட்சுமணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் மு.களஞ்சியம், “சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் வெளியிடக் கேட்டோம். எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்ததோடு, ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட ராசி, இன்றுவரையிலும் ஏறக்குறைய இருபது லட்சம் பேர் எங்களது படத்தின் பர்ஸ்ட் லுக்கைப் பார்வையிட்டுள்ளனர். அதோடு, உலகம் முழுக்க உள்ள நண்பர்கள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ஆணவக்கொலை பற்றிய பதிவாக இந்த முந்திரிக்காடு திரைப்படம் இருக்கும். அதை மையப்படுத்திதான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது” என்று கூறியுள்ளார்.
ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்ய ஏ.கே.பிரியன் இசையமைக்கிறார். விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆணவக்கொலைக் கொடுமை பேசும் முந்திரிக்காடு! ஆணவக்கொலைக் கொடுமை பேசும் முந்திரிக்காடு! Reviewed by நமதூர் செய்திகள் on 03:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.