டைட்டானிக் மூழ்கியபோது…

டைட்டானிக் மூழ்கியபோது…

தினப் பெட்டகம் – 10 (07.06.2018)
வரலாற்றில் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று, டைட்டானிக் கப்பல் மூழ்கியது. டைட்டானிக் பற்றி எடுக்கப்பட்ட படமும் மிகவும் பேசப்பட்டது. 1912, ஏப்ரல் 14 அன்று இரவில் அந்தக் கப்பலுக்கு ஏற்பட்ட விபத்தின்போது நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு:
கப்பல் பயணத்தின்போது ஆபத்து ஏதேனும் வந்தால், எப்படித் தப்பிப்பது என்று பயணத்திற்கு முன்பு சொல்லிக் கொடுப்பார்கள். அது lifeboat drill என்று குறிப்பிடப்படும். டைட்டானிக் கப்பல் மூழ்கிய அன்று, ஒரு lifeboat drill நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஏதோ காரணங்களுக்காகக் கடைசி நேரத்தில் அதை நிறுத்திவிட்டார் கேப்டன்.
பல நூறு பேர் இறந்த அந்த விபத்தில், உயிர் தப்பிய ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன் நாட்டுக்கு உயிருடன் திரும்பியதால், அவரைக் கோழை என்று அனைவரும் சொன்னார்களாம்.
டைட்டானிக் கப்பலில் இருந்த நான்கு புகை போக்கிகளில் மூன்றுதான் வேலை செய்யுமாம். நான்காவது அழகுக்காக வைக்கப்பட்டிருந்தது.
விபத்து நிகழ்ந்ததும், முதலில் ‘லண்டன் டெய்லி’ என்ற செய்தித்தாளில் வெளியான செய்தியில், “டைட்டானிக் மூழ்கியது, உயிர்ச் சேதம் ஏதும் இல்லை” என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் பிறகு, இரண்டு நாட்கள் கழித்துதான் நடந்த முழுச் சம்பவமும் வெளியானது.
அந்தக் கப்பல் வேலை செய்வதற்கு ஒரு நாளைக்கு 600 டன் கரி தேவைப்பட்டிருக்கிறது. 176 பேர் கொண்ட ஒரு குழு கைகளால் அதை அள்ளிப் போட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறை 100 டன் சாம்பல் கடலில் கலக்கப்பட்டது.
பனிக்கட்டியைப் பார்த்ததற்கும், கப்பல் அதில் சென்று மோதியதற்கும் இடையில் வெறும் 37 விநாடிகள் மட்டுமே இருந்தன.
டைட்டானிக் பனிக்கட்டியில் மோதியதும் , அதிலிருந்து தெறித்த பனிக்கட்டித் துகள்களை கொண்டு பந்து செய்து விளையாடி இருக்கின்றனர் பயணம் செய்தவர்கள்! விபத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. விபத்தில் 1500 பேர் இறந்துபோயினர்; ஆனால், 360 உடல்கள்தான் கிடைத்தன.
படத்தில் இசைக் கலைஞர்களின் ஒரு காட்சி வருமில்லையா? அது உண்மையில் நிகழ்ந்ததுதான். அக்கலைஞர்கள் 2 மணி நேரம் 5 நிமிடங்கள் தொடர்ந்து வாசித்திருக்கின்றனர், கப்பல் மூழ்கும் வரை!
டைட்டானிக் கப்பலின் அளவு 882 அடி, 9 அங்குலம்.
இன்னும் 20 ஆண்டுகளுக்குள், halomonas titanicae என்ற புதியதொரு கிருமி, அக்கப்பலில் எஞ்சியிருக்கும் பாகங்களைத் தின்றுவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- ஆஸிஃபா
டைட்டானிக் மூழ்கியபோது… டைட்டானிக் மூழ்கியபோது… Reviewed by நமதூர் செய்திகள் on 23:36:00 Rating: 5

No comments:

Powered by Blogger.