முஸ்லிமை மணந்ததால் இந்து பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு!

முஸ்லிமை மணந்ததால் இந்து பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு!
லக்னோ (22 ஜூன் 2018): உத்திர பிரதேசத்தில் முஸ்லிமை திருமணம் முடித்ததால் பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த பெண் அதிகாரி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
உத்திர பிரதேசத்தில் அனஸ் சித்தீக்கி என்பவர் தன்வி சேத் என்ற இந்து பெண்ணை திருமணம் முடித்தார். அவருடைய பெயரை சாதியா அனஸ் என்றும் மாற்றியுள்ளார்.
இந்நிலையில் லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்தில் சாதியாவும் அவரது கணவரும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தனர். ஆனால் அங்கிருந்த பெண் பாஸ்போர்ட் அதிகாரி சாதியாவுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்ததோடு, பெயரை முந்தைய பெயரான தன்வி என்று மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மதத்தை சுட்டிக்காட்டி தகாத வார்த்தைகளை அந்த அதிகாரி உபயோகப் படுத்தியதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து அனஸ் சித்தீக்கி அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் அதிகாரி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். மேலும் சாதியாவுக்கும் அவரது கணவருக்கும் இன்று பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும் லக்னோ பாஸ்போர்ட் உயர் அதிகாரி விகாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
முஸ்லிமை மணந்ததால் இந்து பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு! முஸ்லிமை மணந்ததால் இந்து பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.