பாஜக பயங்கரவாத இயக்கம்: மம்தா பானர்ஜி

பாஜக பயங்கரவாத இயக்கம்: மம்தா பானர்ஜி

பாஜகவைப் பயங்கரவாத இயக்கம் என்று விமர்சித்து மம்தா பானர்ஜி, இந்துக்கள் மத்தியிலும் பாஜக மோதலை உருவாக்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நேற்று (ஜூன் 21) நடைபெற்ற மாநாட்டில் அம்மாநில முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாங்கள் ஒன்றும் பாஜகவைப் போன்று பயங்கரவாத இயக்கம் அல்ல. அவர்கள் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இடையே மட்டும் மோதலைத் தூண்டிவிடவில்லை. இந்துக்கள் மத்தியிலும் மோதலை உருவாக்குகிறார்கள்” என்று விமர்சித்தார்.
மேலும், “எங்கள் கட்சி உறுப்பினர்கள்மீது வெடிகுண்டு வீசுங்கள் என்று மக்களிடத்தில் அவர்கள் கூறுகின்றனர். எங்கள் கட்சி தலைவர்களுக்கு எதிராக என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என்று அவர்களின் கட்சித் தலைவரே கூறுகிறார். இது ஒரு சாதாரண கட்சிதானா? இந்தியாவில் உள்ள மோசமாகப் பயங்கரவாத இயக்கம் பாஜகதான். அழிவு என்பதே அவர்களின் சித்தாந்தம்” என்றும் மம்தா குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி டெல்லியில் பாஜகவுக்கு எதிராகச் செயல்பட்டாலும் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு உதவுகிறது என்று குற்றம்சாட்டிய மம்தா, “சிபிஐ(எம்), காங்கிரஸ், பாஜக மற்றும் மாவோயிஸ்ட்கள் வங்கத்தில் கைகோத்துள்ளனர். அவர்களின் மெகா கூட்டணியைப் பாருங்கள்” என்று விமர்சித்துள்ளார்.
திருணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்கள் நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “நான் நரேந்திர மோடி அல்ல, வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்வதற்கு. தேர்தலில் போட்டியிடுவதற்கும் மற்ற சவால்களைச் சமாளிப்பதற்கும் கட்சி உறுப்பினர்கள் கட்சிக்கு நிதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
பாஜக பயங்கரவாத இயக்கம்: மம்தா பானர்ஜி பாஜக பயங்கரவாத இயக்கம்: மம்தா பானர்ஜி Reviewed by நமதூர் செய்திகள் on 23:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.