கேரளா: 2,600 கோடி வழங்க சிபிஐ வலியுறுத்தல்!

கேரளா: 2,600 கோடி வழங்க சிபிஐ வலியுறுத்தல்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 700 கோடி ரூபாய் நிவாரண நிதியை மறுத்த மத்திய அரசு கேரளாவிற்கு 2,600 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி நேற்று (ஆகஸ்ட் 23) அளித்துள்ள பேட்டியில் “ஒரு நாடு இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும்போது மற்ற நாடுகள் அதற்கு உதவுவது இயல்பான விஷயம். இந்தியாவும் இதற்கு முன்பாக நேபாளம் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவியுள்ளது. பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கூட இந்திய அரசு உதவி செய்திருக்கிறது” என்று சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
பாஜக அரசு மற்ற நாடுகளின் உதவியை ஏற்பதில்லை என்ற முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த முடிவை பின்பற்றுவதாக கூறியுள்ளது. ஆனால் அதே அரசுதான் ஆந்திராவிற்க்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும் தெரிவித்தது. அதை ஏன் பாஜக அரசு பின்பற்றவில்லை என சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
மேலும் “இந்திய அரசு கேரள அரசு கேட்கும் நிதியையும் கொடுக்கத் தயாராக இல்லை. கேரளாவில் ரூ. 20,000 கோடி மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கேரள அரசு 2,600 கோடி ரூபாய் மட்டுமே கேட்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மற்ற நாடுகளின் உதவியை மத்திய அரசு ஏற்காது என்றால், கேரளா அரசு கேட்கும் தொகையை கொடுக்க வேண்டும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் போலி கவுரம் பார்ப்பதாகவும்” சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டினார்.
கேரளா: 2,600 கோடி வழங்க சிபிஐ வலியுறுத்தல்! கேரளா: 2,600 கோடி வழங்க சிபிஐ வலியுறுத்தல்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.