ஆதாரை தவராக பயன்படுத்துபவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கக வேண்டும்: எட்வார்ட் ஸ்னோடன்


ஆதாரை தவராக பயன்படுத்துபவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கக வேண்டும்எட்வார்ட் ஸ்னோடன்
ஆதார் குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் பல விமர்சனங்கள் பலரால் வைக்கப்பட்டு வரும் நிலையில் ஆதார்இந்திய மக்களை கண்காணிக்க UIDAI யால் உருவாக்கப்பட்ட உளவு சாதனம் என்று எட்வார்ட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார்ஜெய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய ஸ்னோடன், “ஒரு குழந்தை பெற்று அதற்கு பிறப்பு சான்றிதல் பெறுவது கூட ஆதார் எண் இல்லாமல் முடியாது எனும் அளவிற்கு ஆதாரை நாடெங்கிலும் கட்டாயமாக மக்கள் மீது திணிப்பது அச்சுறுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்திலும் ஆதார் இணைப்பு ஏற்பட்டால் அது இந்திய மக்களின் சமூக தனியுரிமையின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பல ஆண்டுராய்டு போன்களில் பயனாளர் அனுமதி எதுவும் இல்லாமல் பதியப்பட்ட UIDAI இன் அவசர உதவை அழைப்பு எண் குறித்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக அவர் தனது கருத்துக்களை தெரிவித்தார்அப்போதுஇது போன்ற நிக்ழ்வுகளின் போதெல்லாம்ஆதார் ஒரு உளவு எந்திரம் அல்ல என்றும் அது மக்களின் பயன்களுக்கானது என்ற UIDAI இன் பதிலை சுட்டிக்காட்டிய ஸ்னோடன்எந்த அரசும் இது போன்ற திட்டங்கள் மக்களை கண்காணிப்பதற்காக தாங்கள் ஏற்படுத்தியது தான் என்று கூறப்போவதில்லை என்றும் மாறாக அது மக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது என்றே கூறும் என்று தெரிவித்துள்ளார்.
UIDAI அவசர அழைப்பு எண் குறித்து கருத்து தெரிவித்த அவர், “முதலில் UIDAI, அந்த எண் தவறானது என்று கூறினார்கள்பின்னர் இதனை செய்தது நாங்கள் அல்ல என்று கூறினார்கள்பின்னர் இது கூகிளின் தவறுஎங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்று கூறினார்கள்கூகிளின் தவறுக்கு ஆதார் அமைப்பையே குறை கூற கூடாது என்றும் அது மக்களின் பணத்தை மிச்சப்படுத்துகின்றது என்றும் கூறி மக்கள் அதை குறித்து மட்டும் தான் கவலை கொள்ள வேண்டுமே தவிர ஆதார் பாதுகாப்பு குறித்து அல்ல என்றும் கூறினார்கள்மேலும் இதனை மறுத்து கேள்வி எழுப்பியவர்களை உள்நோக்கம் கொண்டவர்கள் என்றும் மக்களிடையே பீதியை கிளப்புபவர்கள் என்றும் கூறி மக்கள் அவர்களுக்கு செவிமடுக்க வேண்டாம் என்றும் கூறினார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இத்துடன்ஆதாரை தவறாக பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு வெறும் அபராதம் மட்டும் விதித்தால் போதாது என்றும் அவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்இது குறித்து கூறிய அவர், “அரசு மானியம் வழங்காத எந்த ஒரு சேவைக்கும் ஆதார் எண்ணை பெறுபவர்கள் மீது அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் மீதான மற்றும் ஆதார் மீதான விமர்சனங்களை UIDAI கையாலும் விதம் குறித்து குறிப்பிட்ட அவர்இத்தகைய விமர்சனங்களுக்கு UIDAI பொறுப்பான பதில்களை அளிக்க வேண்டும் என்றும் அந்த விமர்சனங்களை ஏற்று இந்த அமைப்பை சரி செய்ய வேண்டுமே தவிர அனைத்து விமர்சனங்களும் போலியானது என்று ஒற்றை முடிவுடன் இருக்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரும் ஆபத்தான மோசடி என்பதுபொதுமக்கள் தங்களின் உரிமைகளை பற்றியோ தகவல் பாதுகாப்பு பற்றியோதனியுரிமை பற்றியோ கவலை கொள்ள வேண்டாம் என்று ஒரு அரசு கூறுவது தான் என்று கூறிய ஸ்னோடன்இது போன்ற ஒரு விவாதம் உருவானதே நாஜி ஜெர்மெனியில் இருந்து தான் என்று தெரிவித்துள்ளார்மேலும் கூறிய அவர்,”ஒரு சுதந்திரமான சமூகத்தில் இதில் நேர் மாறாக இருக்கும்உங்களுக்கு ஒரு உரிமை ஏன் உள்ளது என்பதை நீங்கள் விளக்க தேவையில்லைஅது உங்களுக்கு ஏன் மதிப்பிற்குரியது என்றோ அது உங்களுக்கு ஏன் தேவை என்றோ விளக்கத் தேவையில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மானியங்கள் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை தவிர்க்கவே ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற அரசின் காரணத்தை மறுத்த ஸ்னோடன், “இது தான் ஆதாரின் முழுமுதல் நோக்கமென்றால் யாருக்கும் அதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இருக்க முடியாது என்றும் இங்கு பிரச்சனையே அரசு கூறிய காரணங்களுக்கு தொடர்பே இல்லாத பல விஷயங்களில் ஆதார் பயன்படுத்தப்படுவது தான்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆதாரை தவராக பயன்படுத்துபவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கக வேண்டும்: எட்வார்ட் ஸ்னோடன் ஆதாரை தவராக பயன்படுத்துபவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கக வேண்டும்: எட்வார்ட் ஸ்னோடன் Reviewed by நமதூர் செய்திகள் on 00:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.