எமர்ஜென்சியா? எழுத்தாளர் அருந்ததி ராய் கண்டனம்!

எமர்ஜென்சியா? எழுத்தாளர் அருந்ததி ராய் கண்டனம்!

சமூகச் செயல்பாட்டாளர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தப்படுகிறது, எமர்ஜென்சி அமல்படுத்தப்படுகிறதா என்று எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட்-28) பத்திரிகையாளர்களிடம் பேசிய அருந்ததி ராய் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள்,வழக்கறிஞர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,தலித் உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் அறிவாளிகளின் வீடுகளில் ஏன் சோதனைகள் நடத்தப்படுகின்றன? கும்பல் படுகொலைகளை செய்பவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படுவதில்லையே. அவர்கள் பட்டப்பகலில் படுகொலைகளில் ஈடுபட்டனரே. இந்த நிகழ்வுகள் இந்தியா எதை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகின்றன.
நடப்பது மிகவும் அபாயகரமானதாகும். இது தேர்தலுக்கான முன் தயாரிப்பாகும். நாம் இதை நடக்கவிடக் கூடாது. நாம் ஒன்று சேர வேண்டும். இல்லாவிட்டால் நமது அருமையான சுதந்திரம் பறிபோய்விடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எமர்ஜென்சியா? எழுத்தாளர் அருந்ததி ராய் கண்டனம்! எமர்ஜென்சியா? எழுத்தாளர் அருந்ததி ராய் கண்டனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.