கேரளா செல்லும் ஜிப்மர் மருத்துவக் குழு!

கேரளா செல்லும் ஜிப்மர் மருத்துவக் குழு!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தைக் கேரள வெள்ள நிவாரணத்துக்காக அளித்ததோடு மட்டுமல்லாமல், மருத்துவக் குழு ஒன்றையும் கேரளாவுக்கு அனுப்பியுள்ளனர்.
கேரளாவில் வரலாறு காணாத பெருமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து பெய்துவரும் பெருமழையால் 14 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, இதுவரை 368 பேர் பலியாகியுள்ளனர். அங்கு மக்கள் தங்குவதற்கு இடம், உணவு மற்றும் மருத்துவ உதவியின்றி தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவுக்குத் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து உதவிக்கரம் நீட்டிவருகின்றன.
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தைக் கேரள வெள்ள நிவாரணத்துக்காக வழங்கியுள்ளனர்.
மேலும் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை அளிப்பதற்காக 34 பேர் கொண்ட மருத்துவக் குழு ஒன்றும் கேரளாவுக்குச் செல்கிறது.
கேரளா செல்லும் ஜிப்மர் மருத்துவக் குழு! கேரளா செல்லும் ஜிப்மர் மருத்துவக் குழு! Reviewed by நமதூர் செய்திகள் on 03:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.