கண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா!


கண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா!
இயக்குநர் சீனு ராமசாமி உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியிருக்கும் படம். தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் மாரியம்மன் கோயில் திருவிழாவில் இருந்து தொடங்குகிறது திரைப்படம். ஹீரோவை காட்ட வேண்டும் என்பதற்காக ப்ரத்யோகமாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என எதுவும் இல்லாமல் இயல்பான தோற்றத்தில், சாதரன இளைஞனாக அறிமுகமாகிறார் கமலகண்ணன் ‘உதயநிதி’.
அழிந்து வரும் இயற்கை விவசாய முறையை மீட்டுருவாக்கம் செய்யத்துடிக்கும் வேளாண்படித்த பட்டதாரியாக வலம் வருகிறார். தன்னுடைய சொந்த விவசாய நிலத்திலே இயற்கை உரம் தயாரித்து வினியோகம் செய்கிறார். ஊரில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு வங்கி கடன் பெற்று தருவது போன்ற உதவிகளை செய்கிறார்.
அந்த கிராமத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் வங்கிக்கு மேலாளராக வருகிறார் பாரதி ‘தமன்னா’. நேர்மையான அதிகாரியாக இருக்கும் பாராதி, கிராமத்தில் வங்கிக்கடன் பெற்று திருப்பித்தராதவர்களை அழைத்து எச்சரிக்கும் வேலையில் இறங்குகிறார். அதில் கிராம மக்கள் பலருக்கு கமலகண்ணன் வங்கிகடன் பெற்று தந்திருக்கிறார் கடன் பெற்றவர்கள் முறையாக பணம் கட்டாததால் அவரை அழைத்து எச்சரிக்கிறார். இப்படி இரண்டு நேர்மையான மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது என்ன நிகழ்க்கிறது. அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
காதல், குடும்ப உறவு, ஆண்,பெண் சமத்துவம், போன்றவற்றை எதார்த்தமாக கூறியிருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. வங்கி மேலாளராக வரும் பாரதி ’தமன்னா’ இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாரதி என்கிற ஒரு நேர்மையான இயல்பான பெண்ணாகவே அவர் ஒன்றிவிடுகிறார். பெண்களை கவர்ச்சி பொருளாக, ஆண்களின் கட்டுபாட்டிற்குள் இருக்கும் சமத்துவமில்லாத கதாபாத்திரங்களை சித்தரிக்கும் இன்றைய சூழலில் இது போன்ற கதாபாத்திரம் தமிழ் சினிமாவிற்கு ஆறுதல் அளிக்கிறது. காதலனை உருகி உருகி காதலிப்பதுபோல் சித்தரிக்கப்பட்ட பெண்ணாக இல்லாமல் எதார்த்தத்தை புரிந்துகொண்டு கடந்து செல்லும் தமன்னாவின் நடிப்பு பாராட்டத்தக்கது.
கமலகண்ணனின் அப்பாவாக வரும் ராமசாமி ‘பூ ராமு’, அப்பத்தாவாக வரும் மூத்த நடிகர் வடிவுக்கரசி, கமலகண்ணனின் பள்ளி கால தோழியாக வரும் வசுந்திரா அனைவரும் மனதில் பதியும் அளவிற்கு நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
பெண்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் கலாச்சார ஒடுக்குமுறைகளை மெதுவாக உடைக்கிறது சில காட்சிகள். குடும்பங்களுக்குள் ஆண், பெண் சமத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சில காட்சிகளில் பார்க்கமுடிகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்திருக்கும் பாடல்கள் அனைத்தும் அர்த்தமுள்ளதாகவும் அழுத்தமாகவும் உள்ளது. ஒலி ஒளி பதிவு நம்மை கிராமத்து சூழலுக்கு இட்டுச்செல்கிறது.
நம்பிக்கையை மட்டுமே முதலீடாக வைத்து நேர்மையாக பயணிக்கு இரண்டு எதார்த்தவாதிகளின் கதை.
கண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா! கண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா! Reviewed by நமதூர் செய்திகள் on 03:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.