வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவியதற்காக, குற்ற உணர்ச்சியில் துடிப்பதாகவும், ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும் பிரபல வழக்குரைஞரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் சமாஜவாதி சிந்தி சபை என்ற அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளித்ததால், நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்று உழைத்தேன்.
ஆனால், அவர் பிரதமரான பிறகு கருப்புப் பணத்தைக் கொண்டு வரத் தவறி விட்டார். இனிமேலும் அவர் கொண்டு வர மாட்டார் என்றே தோன்றுகிறது.
மோடிக்கு உதவியதால், குற்ற உணர்ச்சியையும், ஏமாற்றத்தையும் உணர்கிறேன். அவரை நம்ப வேண்டாம் என்று கூறவே இங்கு வந்துள்ளேன்.
உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தூய்மையானவர் என்ற பெயர் உள்ளது. அவர் நாட்டின் எதிர்காலமாகத் திகழ்வார் என்றார் ராம் ஜெத்மலானி.
No comments: