உணவுப் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு!
உணவுப் பாதுகாப்பு இல்லாமல் உலக வர்த்தக ஒப்பந்தம் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். திங்கட்கிழமை (டிசம்பர் 11) நடந்த அமர்வில் சுரேஷ் பிரபு பேசுகையில், "பொது பங்குதாரர் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் 800 மில்லியன் பேர் உணவின்மை மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் தவிக்கின்றனர்.
உலக சமூகத்திடம் இருந்து கருத்துகளைப் பெற்று இந்தப் பிரச்னைக்குப் போதுமான தீர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தத் தீர்வு நிரந்தரத் தீர்வாக இருக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு வேண்டுமென்றும் இந்தியா கோரிக்கை வைக்கிறது. இந்தியாவில் 600 மில்லியன் ஏழை மக்கள் வாழ்கின்றனர். இதை நாங்கள் மறுக்கவில்லை. வர்த்தக சிக்கல்களைத் தீர்க்க, நியாயமான மற்றும் திறமையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.
உலக வர்த்தக அமைப்பின் தீர்மானப்படி தான் வேளாண் பொருட்களுக்கும், எரிபொருட்களுக்குமான மானியம் நிறுத்தப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் சூழலில் மீன்பிடித் தொழிலுக்கான மானியத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உலக வர்த்தக அமைப்பு கொண்டுவரும் தீர்மானத்திற்குத் தனது ஆதரவை வெளிப்படையாக இந்த மாநாட்டில் இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:39:00
Rating:
No comments: